• Mar 29 2024

மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு - 10 ஆயிரம் புற்றுநோயாளர்களின் உயிருக்கு ஆபத்து!

Chithra / Jan 6th 2023, 1:35 pm
image

Advertisement

15 முக்கிய புற்றுநோய் மருந்துகளிற்கான தட்டுப்பாடு காரணமாக 10 ஆயிரம் புற்றுநோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜயந்த பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

புற்றுநோயாளிகளிற்கு 15 பிரதான மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்கின்றன 90 வீதமான மருந்துகளிற்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


நாங்கள் சுகாதார அமைச்சிற்கு இது குறித்து அறிவித்துள்ளோம். இதனுடன் தொடர்புபட்ட வேறு தரப்பினரும் இது குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

எனினும் ஆபத்தில் சிக்குண்டுள்ள மக்களை காப்பாற்ற சுகாதார அமைச்சு எதனையும் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்தால் புற்றுநோயை குணப்படுத்தலாம், கிகிச்சை தாமதமானால் அது பரவும் மருத்துவர்களால் எதனையும் செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு - 10 ஆயிரம் புற்றுநோயாளர்களின் உயிருக்கு ஆபத்து 15 முக்கிய புற்றுநோய் மருந்துகளிற்கான தட்டுப்பாடு காரணமாக 10 ஆயிரம் புற்றுநோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜயந்த பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.புற்றுநோயாளிகளிற்கு 15 பிரதான மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்கின்றன 90 வீதமான மருந்துகளிற்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நாங்கள் சுகாதார அமைச்சிற்கு இது குறித்து அறிவித்துள்ளோம். இதனுடன் தொடர்புபட்ட வேறு தரப்பினரும் இது குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.எனினும் ஆபத்தில் சிக்குண்டுள்ள மக்களை காப்பாற்ற சுகாதார அமைச்சு எதனையும் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்தால் புற்றுநோயை குணப்படுத்தலாம், கிகிச்சை தாமதமானால் அது பரவும் மருத்துவர்களால் எதனையும் செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement