• May 19 2024

37வருடங்களின் பின்னர் 13ஐ பற்றி கதைப்பது வெட்கக்கேடானது- எஸ்.எம்.எம்.முஸ்ஸாரப் கருத்து!SamugamMedia

Sharmi / Feb 22nd 2023, 4:53 pm
image

Advertisement

அரசியமைப்பிலுள்ள 13வது திருத்தச்சட்டத்தை 37 வருடங்களின் பின்னர் அமுல்படுத்துகின்றோம் ஒன்றாக வாருங்கள் என அழைப்பது ஒரு வெட்கக்கேடான விடயம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸ்ஸாரப் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்புக்கூட வரப்போகின்ற தேர்தல் மையப்படுத்திய முஸ்தீபு என எண்ணுகின்றபோது சிறுபான்மை மக்களை ஒரு கிள்ளுக் கீரை போன்று பயன்படுத்துகின்றார்களோ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

13வது திருத்தச்சட்டடம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என யாராவது கூறுவார்களா என்று பார்த்தால் எவரும் இல்லை என்றும் தெட்டத்தெளிவாக பதில் சொல்வதற்கு எவரும் இல்லை என்றும் எஸ்.எம்.எம்.முஸ்ஸாரப் குறிப்பிட்டுள்ளார்.

சோளமுத்துராசாவின் வழக்கு ஒன்றின் தீர்ப்பு மாகாணங்களுக்கு காணி அதிகாரங்கள் இல்லை என்று தெட்டத்தெளிவாக கூறியுள்ளதாகவும் எனவே இந்த நாடு மற்றும் நீதிமன்றங்கள் எதைப் பின்பற்றி முன்நகர்கின்றது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறுபான்மை சமூகம் வெறுமனே கோசமிடவில்லை என்றும் அவர்களுக்கான உரிமைகளை நியாயமாக பெற்று தருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

37வருடங்களின் பின்னர் 13ஐ பற்றி கதைப்பது வெட்கக்கேடானது- எஸ்.எம்.எம்.முஸ்ஸாரப் கருத்துSamugamMedia அரசியமைப்பிலுள்ள 13வது திருத்தச்சட்டத்தை 37 வருடங்களின் பின்னர் அமுல்படுத்துகின்றோம் ஒன்றாக வாருங்கள் என அழைப்பது ஒரு வெட்கக்கேடான விடயம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸ்ஸாரப் தெரிவித்துள்ளார்.இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.இந்த அறிவிப்புக்கூட வரப்போகின்ற தேர்தல் மையப்படுத்திய முஸ்தீபு என எண்ணுகின்றபோது சிறுபான்மை மக்களை ஒரு கிள்ளுக் கீரை போன்று பயன்படுத்துகின்றார்களோ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.13வது திருத்தச்சட்டடம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என யாராவது கூறுவார்களா என்று பார்த்தால் எவரும் இல்லை என்றும் தெட்டத்தெளிவாக பதில் சொல்வதற்கு எவரும் இல்லை என்றும் எஸ்.எம்.எம்.முஸ்ஸாரப் குறிப்பிட்டுள்ளார்.சோளமுத்துராசாவின் வழக்கு ஒன்றின் தீர்ப்பு மாகாணங்களுக்கு காணி அதிகாரங்கள் இல்லை என்று தெட்டத்தெளிவாக கூறியுள்ளதாகவும் எனவே இந்த நாடு மற்றும் நீதிமன்றங்கள் எதைப் பின்பற்றி முன்நகர்கின்றது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.சிறுபான்மை சமூகம் வெறுமனே கோசமிடவில்லை என்றும் அவர்களுக்கான உரிமைகளை நியாயமாக பெற்று தருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement