• Jun 17 2024

களனி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணையில் வெளியான அதிர்ச்சி பின்னணி! samugammedia

Tamil nila / Jun 25th 2023, 11:15 pm
image

Advertisement

களனியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர்.

களனி திப்பிட்டிகொட பகுதியில் இன்று (25) மாலை 4.15 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் திப்பிட்டிகொட ஆரம்ப பாடசாலைக்கு அருகில் வீதியொன்றில் பயணித்த குழுவினர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அத்துடன் ,  துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 3 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தமக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் காவல்துறை உத்தியோகத்தர்கள் தெரிவிக்கையில், T56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், 30 க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் சுடப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள் "திப்பிட்டிகொட லஹிரு" என்ற குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தற்போது தெரியவந்துள்ளனர்.

"கடவத்த கல்ப" என்ற குற்றக் கும்பலின் குழுவினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இரு தரப்பினருக்கும் இடையில் நிலவி வரும் தகராறு காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, நேற்று (24) இரவு அம்பலாங்கொடை பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் வாடகை முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 10.45 அளவில் முச்சக்கரவண்டியில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, ​​அம்பலாங்கொட தர்மசோக வித்தியாலயத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதன்போது முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதனை நிறுத்திய பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், சம்பவம் இடம்பெற்ற போது முச்சக்கரவண்டியில் மேலும் ஒருவர் இருந்ததாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு கைத்துப்பாக்கி ரக துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொட ரண்தொம்பே பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சூட்டி மாமா என அழைக்கப்படும் 56 வயதுடைய திரிமாதுர உஜித் டி சொய்சா என்பவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

இவர் பாதாள உலகக் கும்பலோ அல்லது குற்றச் செயலிலோ ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படவில்லை என்றும், நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதில் தலைமறைவான சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

களனி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணையில் வெளியான அதிர்ச்சி பின்னணி samugammedia களனியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர்.களனி திப்பிட்டிகொட பகுதியில் இன்று (25) மாலை 4.15 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்நிலையில் திப்பிட்டிகொட ஆரம்ப பாடசாலைக்கு அருகில் வீதியொன்றில் பயணித்த குழுவினர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.அத்துடன் ,  துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 3 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் தமக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் காவல்துறை உத்தியோகத்தர்கள் தெரிவிக்கையில், T56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், 30 க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் சுடப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள் "திப்பிட்டிகொட லஹிரு" என்ற குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தற்போது தெரியவந்துள்ளனர்."கடவத்த கல்ப" என்ற குற்றக் கும்பலின் குழுவினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இரு தரப்பினருக்கும் இடையில் நிலவி வரும் தகராறு காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இதேவேளை, நேற்று (24) இரவு அம்பலாங்கொடை பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் வாடகை முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.நேற்றிரவு 10.45 அளவில் முச்சக்கரவண்டியில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, ​​அம்பலாங்கொட தர்மசோக வித்தியாலயத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அதன்போது முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதனை நிறுத்திய பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், சம்பவம் இடம்பெற்ற போது முச்சக்கரவண்டியில் மேலும் ஒருவர் இருந்ததாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.துப்பாக்கிச் சூட்டுக்கு கைத்துப்பாக்கி ரக துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அம்பலாங்கொட ரண்தொம்பே பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சூட்டி மாமா என அழைக்கப்படும் 56 வயதுடைய திரிமாதுர உஜித் டி சொய்சா என்பவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.இவர் பாதாள உலகக் கும்பலோ அல்லது குற்றச் செயலிலோ ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படவில்லை என்றும், நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.அதில் தலைமறைவான சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement