• May 03 2024

இக்கட்டான சுழலில் சைவர்கள்: ஆறுதிருமுருகன் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!samugammedia

raguthees / Apr 1st 2023, 12:41 am
image

Advertisement

சைவர்கள் என்றுமில்லாதவாறு இக்கட்டான சுழலிற்கு தள்ளப்பட்டுள்ளனர் என கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.

நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற சைவ மக்கள் மற்றும் மதம் மீதான அத்து மீறல்களுக்கான தீர்வு காணும் கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது ஆறு திருமுருகன் மேலும் தெரிவிக்கையில்,

கேதீஸ்வரத்திற்கு அருகிலுள்ள சிறாப்பர் மடத்தில் தற்காலிக அலுவலமாக தொல்லியல் திணைக்களம் குடிகொண்டுவிட்டது. கீரிமலை கேணி புனரமைக்க தொடங்கிய  பொழுது அவர்கள் அதில் தலையிட்டனர். 

இப்பொழுது சிறாப்பார் மடத்தினை புனரமைப்பதாக அங்கு நிரந்தரமாக குடிகொண்டுள்ளனர். இவ்வாறாக சைவர்களின் இடங்களினை தொல்லியல் திணைக்களத்தினர் அபகரிக்கின்றனர். 

பௌத்தர்களே இடையூரினை ஏற்படுத்துவதாக எண்ணுகின்றோம் ஆனால் கிறிஸ்தவர்கள் திட்டமிட்டு செய்கின்றார்கள் என்பதை பல பேர் சொல்ல மறுக்கின்றனர். 

அவர்கள் போரினை பயன்படுத்தி  அந்நிய மதத்தினை கிளிநொச்சி,முல்லைதீவு,யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் கெட்டி தனமாக மதமாற்றலை மேற்கொள்ளுகின்றனர். 

யாக்கப்பர் புரம், சமாதான புரம் என கிளிநொச்சிக்கு அருகில் பல புது ஊர்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்கியவர்கள் யார்? 

மக்கள் இல்லாத காணிகளை ஆக்கிரமித்து அதில் சிலைகள், சொரூபங்கள் போன்றவற்றை வைத்துள்ளனர். அது மட்டுமன்றி அண்மையில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர், வடக்கு கிழக்கை சிவபூமியாக பிரகடனப்படுத்தும் செயற்பாடு தான் நடேசர் வைக்கப்பட்டது அதை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் என அறிக்கை வெளியிட்டிருந்தார் . அது பத்திரிகையிலும் பிரசுரமானது. இது ஒரு வேதனையான விடயம். 

திருக்கேதீஸ்வரத்தில் ஒரு குழியினை வெட்டினாலும் தொல்லியல் திணைக்களம் கவனிக்கின்றது. அல்லது கிறிஸ்தவ அமைப்புக்கள் அங்குள்ள  நகரசபையினை உடனடியாக அனுப்புகின்றனர். 

மன்னாரிலுள்ள பிள்ளையாரும் கை, கால் முறிந்தபடியுள்ளார். அதனை கேட்பார் யாருமில்லை. எம்முடை நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்து குரலெழுப்புவதில்லை. மாறாக தமது மதங்களிற்கு பிரைச்சினை வரும் பொழுது மட்டுமே குரல் கொடுக்கின்றனர். 

கோணேஸ்வரத்தில் சிங்கள அரசியல்வாதியொருவர் வலுக்கட்டாயமாக பெட்டி கடையை கடந்த 6 மாதங்களிற்கு முன்னர் நிரந்தரமாக கட்ட திட்டமிட்ட பொழுது ஆலய நிர்வாகத்தினர் எமக்கு தெரியபடுத்தியதை தொடர்ந்து கௌரவ நரேந்திர மோடி அவர்களிற்கு தெரியப்படுத்தி அடுத்த வாரமளவில் 

இந்திய துணை தூதுவரை கோணேஸ்வரத்திற்கு அழைத்து சென்று குறித்த பெட்டி கடையை நிரந்தரமாக அமைப்பதை நிறுத்தியதுடன் சட்டப்பூர்வமாக அங்கிருந்து செல்லுமாறு கூறிய போதிலும் அவர்கள் அசையவில்லை என்று தெரிவித்தார்.

இக்கட்டான சுழலில் சைவர்கள்: ஆறுதிருமுருகன் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்samugammedia சைவர்கள் என்றுமில்லாதவாறு இக்கட்டான சுழலிற்கு தள்ளப்பட்டுள்ளனர் என கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற சைவ மக்கள் மற்றும் மதம் மீதான அத்து மீறல்களுக்கான தீர்வு காணும் கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது ஆறு திருமுருகன் மேலும் தெரிவிக்கையில்,கேதீஸ்வரத்திற்கு அருகிலுள்ள சிறாப்பர் மடத்தில் தற்காலிக அலுவலமாக தொல்லியல் திணைக்களம் குடிகொண்டுவிட்டது. கீரிமலை கேணி புனரமைக்க தொடங்கிய  பொழுது அவர்கள் அதில் தலையிட்டனர். இப்பொழுது சிறாப்பார் மடத்தினை புனரமைப்பதாக அங்கு நிரந்தரமாக குடிகொண்டுள்ளனர். இவ்வாறாக சைவர்களின் இடங்களினை தொல்லியல் திணைக்களத்தினர் அபகரிக்கின்றனர். பௌத்தர்களே இடையூரினை ஏற்படுத்துவதாக எண்ணுகின்றோம் ஆனால் கிறிஸ்தவர்கள் திட்டமிட்டு செய்கின்றார்கள் என்பதை பல பேர் சொல்ல மறுக்கின்றனர். அவர்கள் போரினை பயன்படுத்தி  அந்நிய மதத்தினை கிளிநொச்சி,முல்லைதீவு,யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் கெட்டி தனமாக மதமாற்றலை மேற்கொள்ளுகின்றனர். யாக்கப்பர் புரம், சமாதான புரம் என கிளிநொச்சிக்கு அருகில் பல புது ஊர்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்கியவர்கள் யார் மக்கள் இல்லாத காணிகளை ஆக்கிரமித்து அதில் சிலைகள், சொரூபங்கள் போன்றவற்றை வைத்துள்ளனர். அது மட்டுமன்றி அண்மையில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர், வடக்கு கிழக்கை சிவபூமியாக பிரகடனப்படுத்தும் செயற்பாடு தான் நடேசர் வைக்கப்பட்டது அதை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் என அறிக்கை வெளியிட்டிருந்தார் . அது பத்திரிகையிலும் பிரசுரமானது. இது ஒரு வேதனையான விடயம். திருக்கேதீஸ்வரத்தில் ஒரு குழியினை வெட்டினாலும் தொல்லியல் திணைக்களம் கவனிக்கின்றது. அல்லது கிறிஸ்தவ அமைப்புக்கள் அங்குள்ள  நகரசபையினை உடனடியாக அனுப்புகின்றனர். மன்னாரிலுள்ள பிள்ளையாரும் கை, கால் முறிந்தபடியுள்ளார். அதனை கேட்பார் யாருமில்லை. எம்முடை நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்து குரலெழுப்புவதில்லை. மாறாக தமது மதங்களிற்கு பிரைச்சினை வரும் பொழுது மட்டுமே குரல் கொடுக்கின்றனர். கோணேஸ்வரத்தில் சிங்கள அரசியல்வாதியொருவர் வலுக்கட்டாயமாக பெட்டி கடையை கடந்த 6 மாதங்களிற்கு முன்னர் நிரந்தரமாக கட்ட திட்டமிட்ட பொழுது ஆலய நிர்வாகத்தினர் எமக்கு தெரியபடுத்தியதை தொடர்ந்து கௌரவ நரேந்திர மோடி அவர்களிற்கு தெரியப்படுத்தி அடுத்த வாரமளவில் இந்திய துணை தூதுவரை கோணேஸ்வரத்திற்கு அழைத்து சென்று குறித்த பெட்டி கடையை நிரந்தரமாக அமைப்பதை நிறுத்தியதுடன் சட்டப்பூர்வமாக அங்கிருந்து செல்லுமாறு கூறிய போதிலும் அவர்கள் அசையவில்லை என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement