• Nov 26 2024

யாழ் இந்திய துணைத்தூதரகத்தின் அனுசரணையில் கிளிநொச்சியில் சித்த மருத்துவ முகாம்...!

Sharmi / Mar 16th 2024, 12:05 pm
image

யாழ் இந்திய துணைத் தூதரகமும்,  வட மாகாண சுதேச மருத்துவ திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த சித்த மருத்துவ முகாம் கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் இன்று(16) காலை ஆரம்பமானது.

குறித்த நிகழ்வில் யாழ் இந்திய துணைத் தூதரக உயரதிகாரி மனோஜ்குமார் கலந்து கொண்டார்.

குறித்த மருத்துவ முகாமில் பரிசோதிக்கப்பட்டு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டதுடன்,பரிசோதனைகளும்,  ஆலோசனைகளும் இடம்பெற்றன.

யாழ் இந்திய துணைத் தூதரகத்தினால் 2022 ஆண்டு முதல் ஆரோக்கியமான  வாழ்க்கைக்கு அனைவருக்கும் சித்தா மருத்துவம் என்ற கருப்பொருளில் வட மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்துடன் இணைத்து  வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவ முகாம்களினை ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இவ் மருத்துவ முகமானது 2 வது சித்த மருத்துவ  முகாம் என்பத 2022 ஆம் ஆண்டு கிளிநொச்சி நகரில்  பாரதிபுரம் என்ற பிரதேசத்தில்  ஏற்பாடு செய்யப்பட்ட  சித்த மருத்துவ முகமாமில் 250க்கும் மேற்பட்ட  நோயாளிகள் பங்கேற்று சிகிச்சை பெற்றதுடன் வட மாகாணம் முழுவதிலும் சுமார்  2000 பேர் இதுவரை சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்ப்படுகிறது.




யாழ் இந்திய துணைத்தூதரகத்தின் அனுசரணையில் கிளிநொச்சியில் சித்த மருத்துவ முகாம். யாழ் இந்திய துணைத் தூதரகமும்,  வட மாகாண சுதேச மருத்துவ திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த சித்த மருத்துவ முகாம் கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் இன்று(16) காலை ஆரம்பமானது.குறித்த நிகழ்வில் யாழ் இந்திய துணைத் தூதரக உயரதிகாரி மனோஜ்குமார் கலந்து கொண்டார்.குறித்த மருத்துவ முகாமில் பரிசோதிக்கப்பட்டு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டதுடன்,பரிசோதனைகளும்,  ஆலோசனைகளும் இடம்பெற்றன.யாழ் இந்திய துணைத் தூதரகத்தினால் 2022 ஆண்டு முதல் ஆரோக்கியமான  வாழ்க்கைக்கு அனைவருக்கும் சித்தா மருத்துவம் என்ற கருப்பொருளில் வட மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்துடன் இணைத்து  வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவ முகாம்களினை ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இவ் மருத்துவ முகமானது 2 வது சித்த மருத்துவ  முகாம் என்பத 2022 ஆம் ஆண்டு கிளிநொச்சி நகரில்  பாரதிபுரம் என்ற பிரதேசத்தில்  ஏற்பாடு செய்யப்பட்ட  சித்த மருத்துவ முகமாமில் 250க்கும் மேற்பட்ட  நோயாளிகள் பங்கேற்று சிகிச்சை பெற்றதுடன் வட மாகாணம் முழுவதிலும் சுமார்  2000 பேர் இதுவரை சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement