• Feb 02 2025

பெண்களுக்கு எதிராக பாலின அடிப்படையிலான வன்முறைகளை கையாளும் திறன் பயிற்சி

Tharmini / Feb 1st 2025, 2:31 pm
image

பெண்கள், சிறுவர்களுக்கு  எதிராக இடம் பெறும் பாலிய வன்முறைச் சம்பவங்களின் போது அதனை அணுகுவதற்கான செயல் முறை நிகழ்வொன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக  கந்தளாயில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று (01) இடம் பெற்றது.

நிகழ்வானது திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஒத்துழைப்புடன் திருகோணமலையில் இயங்கி வரும் பெண்களுக்கான சுதந்திர அமைப்பான ஈ_வின்ங் (E_Wing) ஏற்பாடு செய்திருந்ததுடன் குறித்த திட்டமானது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி பங்களிப்பில்  ஆசிய பவுண்டேசன் மற்றும் தேவை நாடும் மகளிர் ஆகியண இணைந்து அமுல்படுத்தி வருகிறது.

இதில் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த கந்தளாய், சேருவில, தம்பலகாமம், மூதூர் ஆகிய பொலிஸ் நிலையங்களில் பெண்கள், சிறுவர் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

பெண்கள் சிறுவர்களுக்கு எதிராக இடம் பெறும் வன்முறைச் சம்பவங்களை பாலின அடிப்படையில் எவ்வாறு கையாள்வது மற்றும் பெண்களை வலுப்படுத்தல் அதன் அணுகு முறை தொடர்பிலும் பல விரிவான விளக்கங்கள் இதன் போது வழங்கப்பட்டன. வளவாளராக சிரேஷ்ட சட்டத்தரதி உதயனி தெவரப்பெரும கலந்து சிறப்பித்தார். 

வன் முறைச் சம்பவங்களை குறைத்து மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான புதிய பொறி முறைகளை இதன் மூலம் எப்படி உருவாக்குவது தொடர்பிலும் பாலின அடிப்படை தொடர்பாக தாங்கள் கையாளும் முறை பற்றியும் குறித்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டன.

சிவில் சமூகங்களுக்கு புதிய தலை முறை ஊடாக பெண்களை பாதுகாக்கவும் திறனை கட்டியெழுப்புவதற்கான உபாய முறைகளை பயன்படுத்தி தங்களது பொலிஸ் பிரிவில் திறன்களை கட்டியெழுப்ப தங்களுக்கான வழிமுறைகளை கையாளுதல் தொடர்பிலும் மேலும் இதன் போது விரிவுரைகள் இடம்பெற்றன. 

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குறித்த E_Wing பெண்களுக்கான சுதந்திர அமைப்பின் ஸ்தாபகர் காயத்திரி நளின காந்தன் பெண்களுக்கு இடம்பெறும் வன்முறை சம்பவங்களை கையாளவும் அதனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் எவ்வாறு பாலின அடிப்படையில் கையாள்வது தொடர்பிலான திட்டத்தினை நாங்கள் நடை முறைப்படுத்தி வருகிறோம் .எதிர்காலத்தில் பெண்கள் சிறுவர்கள் பாதிப்படைவதை குறைக்கும் அணுகு முறைகள் தொடர்பிலும் இன்றைய செயலமர்வில் பொலிஸாருக்கு பகிரப்படுகிறது என்றார்.

நிகழ்வில் திருகோணமலை மாவட்ட செயலக மாவட்ட  பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி தீபானி அபேசேகர, பெண்கள் சுதந்திர அமைப்பான ஈவின்ங் தலைவர் காயத்திரி நளினகாந்தன், ஆசிய பவுண்டேசனின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் எஸ்.சி.சமிலா பெர்னான்டோ உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




பெண்களுக்கு எதிராக பாலின அடிப்படையிலான வன்முறைகளை கையாளும் திறன் பயிற்சி பெண்கள், சிறுவர்களுக்கு  எதிராக இடம் பெறும் பாலிய வன்முறைச் சம்பவங்களின் போது அதனை அணுகுவதற்கான செயல் முறை நிகழ்வொன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக  கந்தளாயில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று (01) இடம் பெற்றது.நிகழ்வானது திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஒத்துழைப்புடன் திருகோணமலையில் இயங்கி வரும் பெண்களுக்கான சுதந்திர அமைப்பான ஈ_வின்ங் (E_Wing) ஏற்பாடு செய்திருந்ததுடன் குறித்த திட்டமானது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி பங்களிப்பில்  ஆசிய பவுண்டேசன் மற்றும் தேவை நாடும் மகளிர் ஆகியண இணைந்து அமுல்படுத்தி வருகிறது. இதில் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த கந்தளாய், சேருவில, தம்பலகாமம், மூதூர் ஆகிய பொலிஸ் நிலையங்களில் பெண்கள், சிறுவர் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.பெண்கள் சிறுவர்களுக்கு எதிராக இடம் பெறும் வன்முறைச் சம்பவங்களை பாலின அடிப்படையில் எவ்வாறு கையாள்வது மற்றும் பெண்களை வலுப்படுத்தல் அதன் அணுகு முறை தொடர்பிலும் பல விரிவான விளக்கங்கள் இதன் போது வழங்கப்பட்டன. வளவாளராக சிரேஷ்ட சட்டத்தரதி உதயனி தெவரப்பெரும கலந்து சிறப்பித்தார். வன் முறைச் சம்பவங்களை குறைத்து மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான புதிய பொறி முறைகளை இதன் மூலம் எப்படி உருவாக்குவது தொடர்பிலும் பாலின அடிப்படை தொடர்பாக தாங்கள் கையாளும் முறை பற்றியும் குறித்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டன. சிவில் சமூகங்களுக்கு புதிய தலை முறை ஊடாக பெண்களை பாதுகாக்கவும் திறனை கட்டியெழுப்புவதற்கான உபாய முறைகளை பயன்படுத்தி தங்களது பொலிஸ் பிரிவில் திறன்களை கட்டியெழுப்ப தங்களுக்கான வழிமுறைகளை கையாளுதல் தொடர்பிலும் மேலும் இதன் போது விரிவுரைகள் இடம்பெற்றன. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குறித்த E_Wing பெண்களுக்கான சுதந்திர அமைப்பின் ஸ்தாபகர் காயத்திரி நளின காந்தன் பெண்களுக்கு இடம்பெறும் வன்முறை சம்பவங்களை கையாளவும் அதனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் எவ்வாறு பாலின அடிப்படையில் கையாள்வது தொடர்பிலான திட்டத்தினை நாங்கள் நடை முறைப்படுத்தி வருகிறோம் .எதிர்காலத்தில் பெண்கள் சிறுவர்கள் பாதிப்படைவதை குறைக்கும் அணுகு முறைகள் தொடர்பிலும் இன்றைய செயலமர்வில் பொலிஸாருக்கு பகிரப்படுகிறது என்றார்.நிகழ்வில் திருகோணமலை மாவட்ட செயலக மாவட்ட  பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி தீபானி அபேசேகர, பெண்கள் சுதந்திர அமைப்பான ஈவின்ங் தலைவர் காயத்திரி நளினகாந்தன், ஆசிய பவுண்டேசனின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் எஸ்.சி.சமிலா பெர்னான்டோ உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement