• Sep 08 2024

பேலியகொடையில் வீடமைப்பு பிரச்சினைக்கு தீர்வு- பிரசன்ன ரணதுங்க, தெரிவிப்பு ! samugammedia

Tamil nila / Aug 15th 2023, 7:21 pm
image

Advertisement

பேலியகொடை நகர அபிவிருத்தித் திட்டத்தை மேல்மாகாண அபிவிருத்தித் திட்டத்தில் உள்ளடக்கி அதனைத் தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

பத்தரமுல்லை, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் இன்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொழும்புக்கு மிக அருகில் அமைந்துள்ள பேலியகொடை நகரம் கொழும்புடன் இணைந்து விரைவான அபிவிருத்தியை அடைந்துள்ளது. களனி கங்கையின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளதால், தொடர்ந்து வெள்ள அபாயத்தை எதிர்நோக்கி வருகிறது.

மேலும், பேலியகொடை நகரில் அதிக மக்கள் தொகை அடர்த்தி காரணமாக, வீட்டுப் பிரச்சினை மற்றும் பல சமூக மற்றும் சுகாதார பிரச்சினைகள் எழுந்துள்ளன. பேலியகொடை நகரை இனிய நகரமாக மாற்ற மக்கள் எதிர்நோக்கும் வெள்ள அச்சுறுத்தலுக்கு தீர்வு காணப்படுவதுடன் மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கும் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமென அமைச்சர்பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி பேலியகொடை நகரில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்தார். அரச மற்றும் தனியார் துறைகளின் கூட்டுத் திட்டமாக இதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பேலியகொடையில் வீடமைப்பு பிரச்சினைக்கு தீர்வு- பிரசன்ன ரணதுங்க, தெரிவிப்பு samugammedia பேலியகொடை நகர அபிவிருத்தித் திட்டத்தை மேல்மாகாண அபிவிருத்தித் திட்டத்தில் உள்ளடக்கி அதனைத் தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.பத்தரமுல்லை, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் இன்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.கொழும்புக்கு மிக அருகில் அமைந்துள்ள பேலியகொடை நகரம் கொழும்புடன் இணைந்து விரைவான அபிவிருத்தியை அடைந்துள்ளது. களனி கங்கையின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளதால், தொடர்ந்து வெள்ள அபாயத்தை எதிர்நோக்கி வருகிறது.மேலும், பேலியகொடை நகரில் அதிக மக்கள் தொகை அடர்த்தி காரணமாக, வீட்டுப் பிரச்சினை மற்றும் பல சமூக மற்றும் சுகாதார பிரச்சினைகள் எழுந்துள்ளன. பேலியகொடை நகரை இனிய நகரமாக மாற்ற மக்கள் எதிர்நோக்கும் வெள்ள அச்சுறுத்தலுக்கு தீர்வு காணப்படுவதுடன் மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கும் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமென அமைச்சர்பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.இதன்படி பேலியகொடை நகரில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்தார். அரச மற்றும் தனியார் துறைகளின் கூட்டுத் திட்டமாக இதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement