• Feb 21 2025

மகளை தாக்கிய மருமகன்; தட்டிக்கேட்ட மாமனார் பொல்லால் தாக்கிக் கொலை

Chithra / Feb 19th 2025, 7:17 am
image

 

மகளை தாக்கிய மருமகனின் செயலை தட்டிக் கேட்ட மாமனார் மீது மருமகன் பொல்லால் தாக்கியதில் மாமனார் உயிரிழந்த  சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவேம்பு கிரான் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18)  இடம்பெற்றுள்ளது.

சின்னவேம்பு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய நபரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இன்று பகல் தனது மகளுக்கும் மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது மருமகன், மகளை தாக்கியதை தந்தை கண்டுள்ளார். 

அவ்வேளை தனது மருமகனின் செயலை கண்டித்தவரின் தலையில் மருமகன் பொல்லால் அடித்துள்ளார். 

இதில் படுகாயமடைந்த தந்தை கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து தாக்குதலை நடாத்திய  மருமகன் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மகளை தாக்கிய மருமகன்; தட்டிக்கேட்ட மாமனார் பொல்லால் தாக்கிக் கொலை  மகளை தாக்கிய மருமகனின் செயலை தட்டிக் கேட்ட மாமனார் மீது மருமகன் பொல்லால் தாக்கியதில் மாமனார் உயிரிழந்த  சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவேம்பு கிரான் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18)  இடம்பெற்றுள்ளது.சின்னவேம்பு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய நபரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.இன்று பகல் தனது மகளுக்கும் மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது மருமகன், மகளை தாக்கியதை தந்தை கண்டுள்ளார். அவ்வேளை தனது மருமகனின் செயலை கண்டித்தவரின் தலையில் மருமகன் பொல்லால் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த தந்தை கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து தாக்குதலை நடாத்திய  மருமகன் பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement