• Nov 24 2024

சபாநாயகரின் மின் கட்டணம் 24 இலட்சம் ரூபாய்! நாடாளுமன்றத்தின் மின் கட்டணம் 7 கோடி ரூபாய்!

Chithra / Dec 27th 2023, 12:18 pm
image



நாடாளுமன்றத்திற்கு மே மாதம் முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியின் மொத்த மின்சாரக் கட்டணம் 7 கோடியே 31 இலட்சம் ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த ஒக்டோபர் மாதம் நாடாளுமன்ற வளாகத்தின் மின் கட்டணம் ஒரு கோடியே 28 லட்சத்து 52 ஆயிரம் ரூபாவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இதேவேளை, சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கான கடந்த மே மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான ஆறு மாதங்களுக்கான மொத்த மின்சாரக் கட்டணம் 24 லட்சம் ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தக் காலப்பகுதியில் நுவரெலியா மாளிகை வீட்டின் மின்சாரக் கட்டணம் 18 இலட்சம் ரூபாவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மின் இணைப்புகளுக்கு மேலதிகமாக, மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீட்டுத் தொகுதிக்கு 120 மின் இணைப்புகளும் ஜயவடனகம அதிகாரிகளின் உத்தியோகபூர்வ குடியிருப்புகளுக்கு 15 மின் இணைப்புகளும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.


சபாநாயகரின் மின் கட்டணம் 24 இலட்சம் ரூபாய் நாடாளுமன்றத்தின் மின் கட்டணம் 7 கோடி ரூபாய் நாடாளுமன்றத்திற்கு மே மாதம் முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியின் மொத்த மின்சாரக் கட்டணம் 7 கோடியே 31 இலட்சம் ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒக்டோபர் மாதம் நாடாளுமன்ற வளாகத்தின் மின் கட்டணம் ஒரு கோடியே 28 லட்சத்து 52 ஆயிரம் ரூபாவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதேவேளை, சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கான கடந்த மே மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான ஆறு மாதங்களுக்கான மொத்த மின்சாரக் கட்டணம் 24 லட்சம் ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.அந்தக் காலப்பகுதியில் நுவரெலியா மாளிகை வீட்டின் மின்சாரக் கட்டணம் 18 இலட்சம் ரூபாவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.இந்த மின் இணைப்புகளுக்கு மேலதிகமாக, மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீட்டுத் தொகுதிக்கு 120 மின் இணைப்புகளும் ஜயவடனகம அதிகாரிகளின் உத்தியோகபூர்வ குடியிருப்புகளுக்கு 15 மின் இணைப்புகளும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement