• Jan 08 2025

முறையான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டுள்ள விசேட பொருளாதார மத்திய நிலையம் - க.இளங்குமரன்

Tharmini / Jan 1st 2025, 4:04 pm
image

யாழ். தென்மராட்சி மட்டுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022ஆம் ஆண்டு மக்கள் பாவனைக்காகத் திறக்கப்பட்ட போதிலும் இன்றுவரை பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றது.

200 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு சுமார் மூன்று வருடங்களை அண்மிக்கும் நிலையில் எந்தவித பயனுமற்றுக் காணப்படும் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை இயங்க வைக்கும் நோக்கில் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் இன்று (01) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், பொருளாதார மத்திய நிலைய சந்தைக் கட்டடத்தொகுதி முன்னைய அரசாங்கத்தால் கட்டப்பட்டது. 

எனினும் முறையான திட்டமிடல் இன்றி சரியான இடத்தினை தேர்வு செய்யாமல் கட்டப்பட்டுள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள் எனத் தெரிவித்தார்.

மேலும், தெரிவிக்கையில் இந்த மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் எமது கட்சிக் காரியாலயத்திற்கு எழுத்து மூலம் வந்த முறைப்பாட்டுக்கு அமைய,  இந்த இடத்தினை நான் வந்து பார்வையிட வந்துள்ளேன். 

இந்த இடம் அதிக வெப்பமான பிரதேசமாக இருப்பதாலும் இங்கு சந்தையை குத்தகைக்கு எடுத்தவர்களும் வியார நடவடிக்கை மேற்கொள்ள வியாபாரிகளும் பின் நிற்கின்றார்கள்.

மேலும், முன்னைய அரசாங்கம் சரியான முன்னாயத்தங்கள், இடத் தெரிவு சம்பந்தமான உரிய நடவடிக்கைகள், திட்டமிடலுடன் இக் கட்டடத்தைக் கட்டியிருக்க வேண்டும். 

அப்படிச் செய்தார்களோ தெரியவில்லை.

எதிர்வரும் காலத்தில் எமது அரசாங்கத்தில், இந்த பொருளாதார மத்திய நிலைய சந்தைக் கட்டடத்தொகுதி எவ்வாறு இயக்குவது, மூலாபாயத்தை எவ்வாறு கையாள்வது என்பதைச் சிந்தித்து இந்த இடத்திற்கு ஏற்ற தொழில் துறையை எவ்வாறு செயற்படுத்துவது என கண்டிப்பாகத் தீர்மானித்துள்ளோம்.

மேலும், மக்களின் வரிப் பணம் வீண் விரயமாக்கப்பட்டுள்ளது.

மக்களின் உழைப்பு , அவர்களின் இரத்தம் உறிஞ்சப்பட்டுள்ளது.

எமது அரசாங்கத்தால் இந்த இடத்தில் சிறப்பான முறையில் மக்கள் பயன்படுத்தக் கூடிய முறையில் பொருளாதார மத்திய நிலையத்தை திறக்கத் தீர்மானித்துள்ளோம். என அவர் மேலும் தெரிவித்தார்.






முறையான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டுள்ள விசேட பொருளாதார மத்திய நிலையம் - க.இளங்குமரன் யாழ். தென்மராட்சி மட்டுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022ஆம் ஆண்டு மக்கள் பாவனைக்காகத் திறக்கப்பட்ட போதிலும் இன்றுவரை பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றது.200 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு சுமார் மூன்று வருடங்களை அண்மிக்கும் நிலையில் எந்தவித பயனுமற்றுக் காணப்படும் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை இயங்க வைக்கும் நோக்கில் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் இன்று (01) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.இதன் போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், பொருளாதார மத்திய நிலைய சந்தைக் கட்டடத்தொகுதி முன்னைய அரசாங்கத்தால் கட்டப்பட்டது. எனினும் முறையான திட்டமிடல் இன்றி சரியான இடத்தினை தேர்வு செய்யாமல் கட்டப்பட்டுள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள் எனத் தெரிவித்தார்.மேலும், தெரிவிக்கையில் இந்த மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் எமது கட்சிக் காரியாலயத்திற்கு எழுத்து மூலம் வந்த முறைப்பாட்டுக்கு அமைய,  இந்த இடத்தினை நான் வந்து பார்வையிட வந்துள்ளேன். இந்த இடம் அதிக வெப்பமான பிரதேசமாக இருப்பதாலும் இங்கு சந்தையை குத்தகைக்கு எடுத்தவர்களும் வியார நடவடிக்கை மேற்கொள்ள வியாபாரிகளும் பின் நிற்கின்றார்கள்.மேலும், முன்னைய அரசாங்கம் சரியான முன்னாயத்தங்கள், இடத் தெரிவு சம்பந்தமான உரிய நடவடிக்கைகள், திட்டமிடலுடன் இக் கட்டடத்தைக் கட்டியிருக்க வேண்டும். அப்படிச் செய்தார்களோ தெரியவில்லை.எதிர்வரும் காலத்தில் எமது அரசாங்கத்தில், இந்த பொருளாதார மத்திய நிலைய சந்தைக் கட்டடத்தொகுதி எவ்வாறு இயக்குவது, மூலாபாயத்தை எவ்வாறு கையாள்வது என்பதைச் சிந்தித்து இந்த இடத்திற்கு ஏற்ற தொழில் துறையை எவ்வாறு செயற்படுத்துவது என கண்டிப்பாகத் தீர்மானித்துள்ளோம்.மேலும், மக்களின் வரிப் பணம் வீண் விரயமாக்கப்பட்டுள்ளது.மக்களின் உழைப்பு , அவர்களின் இரத்தம் உறிஞ்சப்பட்டுள்ளது.எமது அரசாங்கத்தால் இந்த இடத்தில் சிறப்பான முறையில் மக்கள் பயன்படுத்தக் கூடிய முறையில் பொருளாதார மத்திய நிலையத்தை திறக்கத் தீர்மானித்துள்ளோம். என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement