நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக மஸ்ஜிதுகளில் கடைபுரியும் இமாம்கள் , முஅத்தின் மற்றும் பணியாளர்களுக்கு விஷேட விடுமுறை வழங்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மஸ்ஜிதுகளிலும் கடமைபுரியும் இமாம்கள், முஅத்தின்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு தமது ஊர்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தமக்கு சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வாக்களிப்பதற்காக சந்தர்ப்பம் மறுக்கப்படுவது தேர்தல் விதிமுறைகள் மற்றும் தனி மனித உரிமை மீறல் எனவும் அவர் கூறினார்.
எனவே, மேற்படி விடயங்களை கவனத்திற்கொண்டு 2024.09.19 திகதி இலங்கை வக்பு சபையின் WB/10009/2024 தீர்மானத்திற்கு அமைய, சகல மஸ்ஜிதுகள், தக்கியாக்கள்,சாவியாக்களில் பணிபுரியும் இமாம்கள், முஅத்தின்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கு தமது சொந்த ஊர்களுக்கு செல்ல விஷேட விடுமுறை வழங்குமாறு மஸ்ஜித் நம்பிக்கையாளர்கள், நம்பிக்கை பொறுப்பாளர்கள் ஆகியோரிடம் கேட்டுக்கொள்வதாகவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மஸ்ஜிதுகளில் கடமைபுரியும் இமாம்கள், வாக்களிப்பதற்கு விஷேட விடுமுறை நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக மஸ்ஜிதுகளில் கடைபுரியும் இமாம்கள் , முஅத்தின் மற்றும் பணியாளர்களுக்கு விஷேட விடுமுறை வழங்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.ஒவ்வொரு மஸ்ஜிதுகளிலும் கடமைபுரியும் இமாம்கள், முஅத்தின்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு தமது ஊர்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தமக்கு சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் தெரிவித்துள்ளார்.தேர்தலில் வாக்களிப்பதற்காக சந்தர்ப்பம் மறுக்கப்படுவது தேர்தல் விதிமுறைகள் மற்றும் தனி மனித உரிமை மீறல் எனவும் அவர் கூறினார்.எனவே, மேற்படி விடயங்களை கவனத்திற்கொண்டு 2024.09.19 திகதி இலங்கை வக்பு சபையின் WB/10009/2024 தீர்மானத்திற்கு அமைய, சகல மஸ்ஜிதுகள், தக்கியாக்கள்,சாவியாக்களில் பணிபுரியும் இமாம்கள், முஅத்தின்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கு தமது சொந்த ஊர்களுக்கு செல்ல விஷேட விடுமுறை வழங்குமாறு மஸ்ஜித் நம்பிக்கையாளர்கள், நம்பிக்கை பொறுப்பாளர்கள் ஆகியோரிடம் கேட்டுக்கொள்வதாகவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.