• May 19 2024

பெரியநீலாவணையில் விசேட வைத்திய முகாம்!

Sharmi / Dec 7th 2022, 9:50 pm
image

Advertisement

பெரியநீலாவணை பிரதேச வைத்தியசாலை  மற்றும் பெரியநீலாவணை பொலிஸ் நிலையம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விசேட மருத்துவ முகாம் இன்று (07.12.2022) பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கல்முனை பிராந்தியத்தில் அண்மைக்காலமாக தொற்றா நோய் காரணமாக திடீர் மரணங்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த மருத்துவ பரிசோதனை இடம்பெற்றது.

பெரியநீலாவணை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர்.திருமதி. சசி யாப்பா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஜி துஷார திலங்க ஜெயலால், பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி. ஆர்.ஏ. டி. சி.எஸ். ரத்நாயக்க, தொற்றா நோய் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர். இர்ஷாத், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர், பொலிஸ் நிலையத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்கள், பிரதேச விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் என பலர் இந்த வைத்திய பரிசோதனையின் போது கலந்து கொண்டனர்.

வைத்திய பரிசோதனையின் போது நீரழிவு, உயர் இரத்த அழுத்தம், கொளஸ்ரோல் போன்ற தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நாளாந்த உணவு பழக்க வழக்கங்கள் குறித்தும் வைத்து அதிகாரிகளினால் இங்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.



பெரியநீலாவணையில் விசேட வைத்திய முகாம் பெரியநீலாவணை பிரதேச வைத்தியசாலை  மற்றும் பெரியநீலாவணை பொலிஸ் நிலையம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விசேட மருத்துவ முகாம் இன்று (07.12.2022) பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.கல்முனை பிராந்தியத்தில் அண்மைக்காலமாக தொற்றா நோய் காரணமாக திடீர் மரணங்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த மருத்துவ பரிசோதனை இடம்பெற்றது.பெரியநீலாவணை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர்.திருமதி. சசி யாப்பா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஜி துஷார திலங்க ஜெயலால், பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி. ஆர்.ஏ. டி. சி.எஸ். ரத்நாயக்க, தொற்றா நோய் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர். இர்ஷாத், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர், பொலிஸ் நிலையத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்கள், பிரதேச விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் என பலர் இந்த வைத்திய பரிசோதனையின் போது கலந்து கொண்டனர்.வைத்திய பரிசோதனையின் போது நீரழிவு, உயர் இரத்த அழுத்தம், கொளஸ்ரோல் போன்ற தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நாளாந்த உணவு பழக்க வழக்கங்கள் குறித்தும் வைத்து அதிகாரிகளினால் இங்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement