நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு - ஃப்ளவர் வீதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல், நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக எழுந்துள்ள கருத்தாடல் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாக குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
ரணிலுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு - ஃப்ளவர் வீதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல், நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக எழுந்துள்ள கருத்தாடல் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாக குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.