• May 08 2024

லாஃப் எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

Chithra / Dec 5th 2022, 8:22 pm
image

Advertisement

லாஃப் சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் லாஃப் எரிவாயு நிறுவனம் சிறப்பு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின் மூலம் உள்நாட்டு லாஃப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாது என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தற்போதைய விலைக்கே எரிவாயு விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு தற்போது 4,360 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு 4,610 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

5 கிலோ கிராம் சமையல் எரிவாயு தற்போது 1,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

புதிய விலை திருத்தத்துக்கு அமைய 5 கிலோ கிராம் சமையல் எரிவாயு 1850 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு தற்போது 815 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

புதிய விலை திருத்தத்துக்கு அமைய 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு 860 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

லாஃப் எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு லாஃப் சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் லாஃப் எரிவாயு நிறுவனம் சிறப்பு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பின் மூலம் உள்நாட்டு லாஃப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாது என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்படி, தற்போதைய விலைக்கே எரிவாயு விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு தற்போது 4,360 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.இந்நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு 4,610 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு தற்போது 1,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.புதிய விலை திருத்தத்துக்கு அமைய 5 கிலோ கிராம் சமையல் எரிவாயு 1850 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு தற்போது 815 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.புதிய விலை திருத்தத்துக்கு அமைய 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு 860 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement