• May 02 2024

தீபாவளியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஆலயங்களில் விசேட வழிபாடுகள்..! samugammedia

Chithra / Nov 12th 2023, 2:26 pm
image

Advertisement


தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆலயங்களில் இன்று(12) விசேட பூஜைகள் நடைபெற்றன.

வரலாற்று சிறப்புமிக்க நல்லைக்கந்தன் ஆலயம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் ஆகியவற்றில் தீபாவளி விசேட பூஜைகள் இடம்பெற்றன.

தீபத்திருநாளை மக்கள் மகிழ்வுடன் கொண்டாடி வருவதுடன், ஆலயங்கள் தோறும் பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றதுடன் இந்த விசேட பூஜைகளில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். 


மட்டக்களப்பு

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்றைய தினம் (12) தீபத்திருநாள் விசேட பூஜை வழிபாடுகள்  இடம்பெற்றன.

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இன்றைய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஆசிவேண்டியும் நாட்டில் ஏற்பட்டுள்ள இன்னல்கள் நீங்கி நாடு சுபீட்சம் அடையவும் சிறப்பு யாகம் மற்றும் அபிசேகம் நடைபெற்றது.

இன்றைய தீபாவளி சிறப்பு வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின சிறப்பு வாய்ந்த ஆலயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. 


மன்னார்

மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் இன்று (12) காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்ட மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆலயங்களில்  விசேட வழிபாடுகள் இடம்பெற்றதுடன் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் மக்கள் ஆலயங்களுக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுட்டு வருவதுடன் மன்னார் மாவட்ட மக்கள் தீபத் திருநாளை அமைதியான முறையில் கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


மலையகம்

மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை இன்று(12) வெகுவிமர்சியாக கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் அட்டன் பகுதியில் உள்ள அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் சுவாமி ஆலயத்தின் பிரதான குருக்கள் தலைமையில் தீபாவளி விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


தீபாவளியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஆலயங்களில் விசேட வழிபாடுகள். samugammedia தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆலயங்களில் இன்று(12) விசேட பூஜைகள் நடைபெற்றன.வரலாற்று சிறப்புமிக்க நல்லைக்கந்தன் ஆலயம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் ஆகியவற்றில் தீபாவளி விசேட பூஜைகள் இடம்பெற்றன.தீபத்திருநாளை மக்கள் மகிழ்வுடன் கொண்டாடி வருவதுடன், ஆலயங்கள் தோறும் பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றதுடன் இந்த விசேட பூஜைகளில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். மட்டக்களப்புகிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்றைய தினம் (12) தீபத்திருநாள் விசேட பூஜை வழிபாடுகள்  இடம்பெற்றன.மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இன்றைய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஆசிவேண்டியும் நாட்டில் ஏற்பட்டுள்ள இன்னல்கள் நீங்கி நாடு சுபீட்சம் அடையவும் சிறப்பு யாகம் மற்றும் அபிசேகம் நடைபெற்றது.இன்றைய தீபாவளி சிறப்பு வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின சிறப்பு வாய்ந்த ஆலயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. மன்னார்மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் இன்று (12) காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்ட மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.ஆலயங்களில்  விசேட வழிபாடுகள் இடம்பெற்றதுடன் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.எனினும் மக்கள் ஆலயங்களுக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுட்டு வருவதுடன் மன்னார் மாவட்ட மக்கள் தீபத் திருநாளை அமைதியான முறையில் கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.மலையகம்மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை இன்று(12) வெகுவிமர்சியாக கொண்டாடுகின்றனர்.அந்த வகையில் அட்டன் பகுதியில் உள்ள அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் சுவாமி ஆலயத்தின் பிரதான குருக்கள் தலைமையில் தீபாவளி விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.அத்துடன் மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement