• May 08 2024

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் - பொலிஸார் குவிப்பு! samugammedia

Chithra / May 29th 2023, 7:31 am
image

Advertisement

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பரீட்சை காலத்தில் நடமாடும் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் விசேட மோட்டார் சைக்கிள் ரோந்து நடவடிக்கைகளும் நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


இதேவேளை, பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்கள் மற்றும் விடைத்தாள் சேகரிப்பு நிலையங்களின் பாதுகாப்பிற்காக 1707 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும், மக்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் தேர்வு மையங்கள் அமைந்திருந்தால் தேர்வுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் - பொலிஸார் குவிப்பு samugammedia நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, பரீட்சை காலத்தில் நடமாடும் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் விசேட மோட்டார் சைக்கிள் ரோந்து நடவடிக்கைகளும் நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.இதேவேளை, பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்கள் மற்றும் விடைத்தாள் சேகரிப்பு நிலையங்களின் பாதுகாப்பிற்காக 1707 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.மேலும், மக்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் தேர்வு மையங்கள் அமைந்திருந்தால் தேர்வுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement