• Apr 02 2025

பெருந்தோட்டத் துறைக்கான விசேட செயலணி ஸ்தாபிக்கப்படும் - எதிர்க்கட்சித் தலைவர் உறுதி

Chithra / Aug 12th 2024, 1:39 pm
image

தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்று 48 மணித்தியாலங்களுக்குள் பெருந்தோட்டத் துறைக்கான விசேட செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

மலையக தமிழர் அபிலாசைகள் அடங்கிய உடன்படிக்கை ஒன்று இன்றைய தினம் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. 

குறித்த நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவித்த போதே சஜித் பிரேமதாச இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். 

அந்த விசேட செயலணி ஊடாக பெருந்தோட்ட மக்களின் அரசியல் பொருளாதாரம், சுகாதார மற்றும் கல்வித்துறைகளில் அந்த மக்களை பன்முகப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


பெருந்தோட்டத் துறைக்கான விசேட செயலணி ஸ்தாபிக்கப்படும் - எதிர்க்கட்சித் தலைவர் உறுதி தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்று 48 மணித்தியாலங்களுக்குள் பெருந்தோட்டத் துறைக்கான விசேட செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மலையக தமிழர் அபிலாசைகள் அடங்கிய உடன்படிக்கை ஒன்று இன்றைய தினம் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. குறித்த நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவித்த போதே சஜித் பிரேமதாச இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். அந்த விசேட செயலணி ஊடாக பெருந்தோட்ட மக்களின் அரசியல் பொருளாதாரம், சுகாதார மற்றும் கல்வித்துறைகளில் அந்த மக்களை பன்முகப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement