• Nov 06 2024

இலங்கை மீனவர்கள் பிரச்சினை பற்றி ஸ்ரீதரன் பேசவில்லை - செல்வராசா மகேசன் குற்றச்சாட்டு...!

Anaath / Jun 9th 2024, 3:08 pm
image

Advertisement

சுவிஸ் நாட்டில்  சீனக்கடலட்டை பற்றி பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இந்திய இழுவை மடிப்படகுகளைப்பற்றியும் இலங்கை  மீனவர்கள் பற்றியும்  பேசியிருக்க வில்லை என யாழ் மாவட்ட கிராமிய கடல் தொழிலாளர் அமைப்புக்களின் கூட்டுறவு சம்மேளனத்தின் பொருளாளர் செல்வராசா மகேசன் தெரிவித்துள்ளார். 

இன்று யாழில் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்,

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சுவிஸ் நாட்டில் போய் சீனக்கடலட்டை பற்றி பேசி இருக்கிறார். இதற்கு முதல் நன்றி சொல்ல வேண்டும் . 

இரண்டாவது இந்திய மீனவர்களும் இலங்கை மீனவர்களும் கடந்த 35 வருடத்துக்கு மேலாக பல உயிர்களை அர்ப்பணித்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். 

எல்லை தாண்டுவதும், எல்லையை சுரண்டுவதும், கைது செய்யப்படுவதும் பாராளுமன்றங்களில் சட்டங்கள் இயற்றப்படுவதும் இப்படி பெரும் மோதல்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறதை பற்றி ஏன் பேசாமல் இருந்தாரோ  எங்களுக்கு விளங்கவில்லை. கடலட்டை பண்ணை பற்றி பேசியவர், சீனாவை பற்றி பேசியவர்,  இந்திய இழுவை மடிப்படகுகளைப்பற்றியும் இலங்கை  மீனவர்கள் பற்றியும் பேசியிருக்க வேண்டும். 

அவர் பேசியிருக்கும் சீன கடலட்டையை பற்றி நாங்கள் அறிந்த வரையில் நல்லாட்சிக்காலத்தில் சீன அரசாங்கத்தின் ஒரு கம்பனி யாழ்ப்பாணம் கிழக்கு அரியாலை என்ற இடத்தில் சிறு குஞ்சுகளை உருவாக்கி விநியோகம் செய்வதற்கான பண்ணை ஒன்று என்பதுதான் நாங்கள் அறிந்த விடயம். அதை பற்றி விமர்சனம் செய்த நிலையில் தற்போதைய அரசாங்கம் அவற்றை அப்புறப்படுத்தி அவை நிறுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் யாழ் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் கடலட்டை பண்ணை போடக்கூடிய இடங்கள போதிய அளவில் இல்லை. அதற்கு தான் நாங்கள்  மக்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். இந்நிலையில் இன்னொரு நாட்டுக்கு இடம் கிடைக்கிறது என்பது சந்தேகமான விடயம். அப்படி இருந்தாலும். இனிமேல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இப்படியான பண்ணைகள் எந்தெந்த இடங்களில் இருக்கிறது? 

உண்மையில் சீனா இப்படியான பண்ணைகளை வைத்திருக்கிறது என்பனை உறுதிப்படுத்தி யாழ்ப்பாணம் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கூறுவார்களாக இருந்தால் நாங்களும் அது சம்பந்தமாக அரசங்கதோடு விவாதித்து அந்த பிரதேசங்களில் உள்ளதை அகற்றுவதற்கான முயற்சியை எங்களினுடைய கிராமிய கடல் தொழிலாளர் சங்கங்களின் சங்கங்களின் சம்மேளனம் மற்றும் கடல்தொழிலாளர்களின் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் மற்றும் வடமாகாண கடல்தொழில் சங்கங்களின் சமாசம் இவை மூன்றிலும் பிரதிநிதித்துவ படுத்தி கொண்டிருக்கின்ற படியால் நிச்சயம் மூன்று அமைப்புகளும் சேர்ந்து கடல் தொழிலமைச்சரோடு கதைத்து இது சம்பந்தமாக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என அவர்  தெரிவித்துள்ளார்.

இலங்கை மீனவர்கள் பிரச்சினை பற்றி ஸ்ரீதரன் பேசவில்லை - செல்வராசா மகேசன் குற்றச்சாட்டு. சுவிஸ் நாட்டில்  சீனக்கடலட்டை பற்றி பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இந்திய இழுவை மடிப்படகுகளைப்பற்றியும் இலங்கை  மீனவர்கள் பற்றியும்  பேசியிருக்க வில்லை என யாழ் மாவட்ட கிராமிய கடல் தொழிலாளர் அமைப்புக்களின் கூட்டுறவு சம்மேளனத்தின் பொருளாளர் செல்வராசா மகேசன் தெரிவித்துள்ளார். இன்று யாழில் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்,குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சுவிஸ் நாட்டில் போய் சீனக்கடலட்டை பற்றி பேசி இருக்கிறார். இதற்கு முதல் நன்றி சொல்ல வேண்டும் . இரண்டாவது இந்திய மீனவர்களும் இலங்கை மீனவர்களும் கடந்த 35 வருடத்துக்கு மேலாக பல உயிர்களை அர்ப்பணித்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். எல்லை தாண்டுவதும், எல்லையை சுரண்டுவதும், கைது செய்யப்படுவதும் பாராளுமன்றங்களில் சட்டங்கள் இயற்றப்படுவதும் இப்படி பெரும் மோதல்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறதை பற்றி ஏன் பேசாமல் இருந்தாரோ  எங்களுக்கு விளங்கவில்லை. கடலட்டை பண்ணை பற்றி பேசியவர், சீனாவை பற்றி பேசியவர்,  இந்திய இழுவை மடிப்படகுகளைப்பற்றியும் இலங்கை  மீனவர்கள் பற்றியும் பேசியிருக்க வேண்டும். அவர் பேசியிருக்கும் சீன கடலட்டையை பற்றி நாங்கள் அறிந்த வரையில் நல்லாட்சிக்காலத்தில் சீன அரசாங்கத்தின் ஒரு கம்பனி யாழ்ப்பாணம் கிழக்கு அரியாலை என்ற இடத்தில் சிறு குஞ்சுகளை உருவாக்கி விநியோகம் செய்வதற்கான பண்ணை ஒன்று என்பதுதான் நாங்கள் அறிந்த விடயம். அதை பற்றி விமர்சனம் செய்த நிலையில் தற்போதைய அரசாங்கம் அவற்றை அப்புறப்படுத்தி அவை நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் யாழ் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் கடலட்டை பண்ணை போடக்கூடிய இடங்கள போதிய அளவில் இல்லை. அதற்கு தான் நாங்கள்  மக்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். இந்நிலையில் இன்னொரு நாட்டுக்கு இடம் கிடைக்கிறது என்பது சந்தேகமான விடயம். அப்படி இருந்தாலும். இனிமேல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இப்படியான பண்ணைகள் எந்தெந்த இடங்களில் இருக்கிறது உண்மையில் சீனா இப்படியான பண்ணைகளை வைத்திருக்கிறது என்பனை உறுதிப்படுத்தி யாழ்ப்பாணம் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கூறுவார்களாக இருந்தால் நாங்களும் அது சம்பந்தமாக அரசங்கதோடு விவாதித்து அந்த பிரதேசங்களில் உள்ளதை அகற்றுவதற்கான முயற்சியை எங்களினுடைய கிராமிய கடல் தொழிலாளர் சங்கங்களின் சங்கங்களின் சம்மேளனம் மற்றும் கடல்தொழிலாளர்களின் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் மற்றும் வடமாகாண கடல்தொழில் சங்கங்களின் சமாசம் இவை மூன்றிலும் பிரதிநிதித்துவ படுத்தி கொண்டிருக்கின்ற படியால் நிச்சயம் மூன்று அமைப்புகளும் சேர்ந்து கடல் தொழிலமைச்சரோடு கதைத்து இது சம்பந்தமாக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என அவர்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement