• Nov 26 2024

பெரும் ஆபத்தில் இலங்கை: அவுஸ்திரேலிய பொருளாதார நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கை..!

Chithra / Mar 6th 2024, 10:21 am
image

 

இலங்கை பெரும் ஆபத்தில் இருப்பதாக அவுஸ்திரேலிய பொருளாதார நிபுணர்கள் தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை கடனை திருப்பிச்செலுத்தவில்லையென்றால் என்ன நடக்கும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது என்றும் நிபுணர்கள் எச்சரித்ததாகவும் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்து இலங்கை திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

மேலும், அவுஸ்திரேலியாவிலுள்ள கன்பரா பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர்கள் இலங்கையின் தலைவிதி குறித்து ஆச்சரியம் தெரிவித்ததாகவும், 

ஒரு நாடு எப்படி இத்தகைய நிலையை அடைந்திருக்க முடியும் என்றும் தம்மிடம் வினவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து அவுஸ்திரேலிய கல்வியலாளர்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும், அவர்களின் சகல கருத்துக்களையும் தன்னால் திரட்ட முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மாத்திரமன்றி பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளைப் பற்றியும் அவர்களுக்கு அதிக புரிதல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையர்களுக்கு மிகவும் கடினமான பாதை இருப்பதாகவும், இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

பெரும் ஆபத்தில் இலங்கை: அவுஸ்திரேலிய பொருளாதார நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கை.  இலங்கை பெரும் ஆபத்தில் இருப்பதாக அவுஸ்திரேலிய பொருளாதார நிபுணர்கள் தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.மேலும், இலங்கை கடனை திருப்பிச்செலுத்தவில்லையென்றால் என்ன நடக்கும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது என்றும் நிபுணர்கள் எச்சரித்ததாகவும் கூறியுள்ளார்.அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்து இலங்கை திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.மேலும், அவுஸ்திரேலியாவிலுள்ள கன்பரா பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர்கள் இலங்கையின் தலைவிதி குறித்து ஆச்சரியம் தெரிவித்ததாகவும், ஒரு நாடு எப்படி இத்தகைய நிலையை அடைந்திருக்க முடியும் என்றும் தம்மிடம் வினவியதாகவும் அவர் கூறியுள்ளார்.இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து அவுஸ்திரேலிய கல்வியலாளர்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும், அவர்களின் சகல கருத்துக்களையும் தன்னால் திரட்ட முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.இலங்கை மாத்திரமன்றி பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளைப் பற்றியும் அவர்களுக்கு அதிக புரிதல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கையர்களுக்கு மிகவும் கடினமான பாதை இருப்பதாகவும், இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement