• May 18 2024

இலங்கையால் இந்தியாவை கைவிட முடியாது..! – அநுர கருத்து samugammedia

Chithra / Oct 31st 2023, 2:44 pm
image

Advertisement

 

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை இந்தியா இல்லாமல் தீர்மானிக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அதிகார மையத்தில் இலங்கை அமைந்திருப்பதால், இந்தியாவை விரும்பியோ விரும்பாமலோ சமாளிக்க வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் அவர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.

எனினும், உலகின் எந்தவொரு அதிகாரத் தளத்திற்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களிக்காத அணிசேரா வெளியுறவுக் கொள்கை தனது ஆட்சியில் பின்பற்றப்படும்.

உலகில் எந்த ஒரு நாடும் தனிமையில் வாழ முடியாது என்றும் அதிகார மோதல்கள் பலம் வாய்ந்த நாடுகளுக்கு இடையே அறிவிக்கப்படாவிட்டாலும் அதிகார மோதல்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் பல்வேறு அதிகார மையங்கள் இருந்தும் இலங்கை அதிகார மையமாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதைக்கு இல்லை எனவும், ஆனால் தற்போதுள்ள அதிகார மையங்கள் முரண்பாட்டின் தரப்பினராகவோ அல்லது தவிர்க்க முடியாத கட்சிகளாகவோ மாறிவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையால் இந்தியாவை கைவிட முடியாது. – அநுர கருத்து samugammedia  இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை இந்தியா இல்லாமல் தீர்மானிக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இந்தியாவின் அதிகார மையத்தில் இலங்கை அமைந்திருப்பதால், இந்தியாவை விரும்பியோ விரும்பாமலோ சமாளிக்க வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.அமெரிக்காவில் அவர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.எனினும், உலகின் எந்தவொரு அதிகாரத் தளத்திற்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களிக்காத அணிசேரா வெளியுறவுக் கொள்கை தனது ஆட்சியில் பின்பற்றப்படும்.உலகில் எந்த ஒரு நாடும் தனிமையில் வாழ முடியாது என்றும் அதிகார மோதல்கள் பலம் வாய்ந்த நாடுகளுக்கு இடையே அறிவிக்கப்படாவிட்டாலும் அதிகார மோதல்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.உலகில் பல்வேறு அதிகார மையங்கள் இருந்தும் இலங்கை அதிகார மையமாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதைக்கு இல்லை எனவும், ஆனால் தற்போதுள்ள அதிகார மையங்கள் முரண்பாட்டின் தரப்பினராகவோ அல்லது தவிர்க்க முடியாத கட்சிகளாகவோ மாறிவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement