• Nov 25 2024

உலகக் கிண்ண போட்டிக்கு இலங்கை மகளிர் அணி தகுதி

Tharun / May 6th 2024, 5:49 pm
image

இருபதுக்கு 20 ஓவர் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.

நேற்று (05) நடைபெற்ற தகுதிச் சுற்றின் அரையிறுதி போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் மகளிர் அணியை 15 ஓட்டங்களால் வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி இந்த தகுதியை பெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் விஷ்மி குணரத்ன 45 ஓட்டங்களை பெற்றார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதன்படி இலங்கை அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

பந்து வீச்சில் சமரி அத்தபத்து 28 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்படி, இந்த தொடரின் இறுதிப் போட்டியில், ஸ்கொட்லாந்து மகளிர் அணியை இலங்கை மகளிர் அணி எதிர்கொள்ளவுள்ளது.

இந்த ஆண்டு பங்களாதேஷில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 ஓவர் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து மகளிர் அணிகளும் தகுதி பெற்றுள்ளன.

உலகக் கிண்ண போட்டிக்கு இலங்கை மகளிர் அணி தகுதி இருபதுக்கு 20 ஓவர் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.நேற்று (05) நடைபெற்ற தகுதிச் சுற்றின் அரையிறுதி போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் மகளிர் அணியை 15 ஓட்டங்களால் வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி இந்த தகுதியை பெற்றுள்ளது.நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் விஷ்மி குணரத்ன 45 ஓட்டங்களை பெற்றார்.பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.இதன்படி இலங்கை அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.பந்து வீச்சில் சமரி அத்தபத்து 28 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.இதன்படி, இந்த தொடரின் இறுதிப் போட்டியில், ஸ்கொட்லாந்து மகளிர் அணியை இலங்கை மகளிர் அணி எதிர்கொள்ளவுள்ளது.இந்த ஆண்டு பங்களாதேஷில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 ஓவர் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து மகளிர் அணிகளும் தகுதி பெற்றுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement