• May 02 2024

பேஸ்புக் காதலனை தேடி இந்தியாவின் ஆந்திர மாநிலத்துக்கு சென்ற இலங்கை தமிழ் யுவதி! samugammedia

Chithra / Jul 30th 2023, 10:35 pm
image

Advertisement

இலங்கையைச் சேர்ந்த இளம் யுவதியொருவர் தனது பேஸ்புக் காதலனுடன் வாழ்வதற்காக இந்தியாவின் ஆந்திர பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.

சிவகுமாரி விக்னேஷ்வரி (25) என்ற பெண், தனது 6 ஆண்டுகால பேஸ்புக் நண்பரான லட்சுமணனை (28) திருமணம் செய்து கொள்ள சுற்றுலா விசாவில் இந்தியா சென்றுள்ளார்.

பேஸ்புக் காதலன் லட்சுமணன், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இலங்கைப் பெண் பேஸ்புக் காதலனை தேடி வந்த செய்தி ஆந்திராவில் சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, ஓகஸ்ட் 15 ஆம் திகதி விசா காலாவதியாகும் முன் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது நீட்டிப்பு பெற வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த பின்னர், விக்னேஸ்வரி ஜூலை 8ஆம் திகதி ஆந்திராவுக்கு வந்தார். ஜூலை 20ஆம் தேதி சித்தூர் மாவட்டம் வி கோட்டாவில் உள்ள சாயிபாபா கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

வி கோட்டா மண்டலத்தைச் சேர்ந்த அரிமகுலப்பள்ளியைச் சேர்ந்த மேசன் தொழிலாளியான லட்சுமணன், இலங்கையைச் சேர்ந்த விக்னேஷ்வரியுடன் பேஸ்புக்கில் 2017இல் அறிமுகமானார். விக்னேஷ்வரி ஜூலை 8ஆம் திகதி கொழும்பில் இருந்து சுற்றுலா விசாவில் சென்னை வந்தடைந்தார். அவரை வரவேற்க லட்சுமணன் சென்னை சென்றார். பின்னர் காதலியை வீட்டிற்கு அழைத்து வந்தார். லட்சுமணனின் குடும்பத்தினர் சம்மதத்துடன் ஜூலை 20ம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் சித்தூர் மாவட்ட போலீசார் தம்பதியை தங்கள் முன் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

விக்னேஷ்வரியின் விசா ஓகஸ்ட் 15ஆம் திகதியுடன் முடிவடைவதால், சித்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) ஒய் ரிஷாந்த் ரெட்டி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதற்குள் அவர் இலங்கை திரும்ப வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

ஆனால் விக்னேஷ்வரி தனது நாட்டிற்குத் திரும்ப மறுத்து, அவர் தனது கணவருடன் நிரந்தரமாக தங்குவதற்கு இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

விக்னேஷ்வரி இந்தியக் குடியுரிமையைப் பெறத் திட்டமிட்டுள்ளதாகவும், நடைமுறை மற்றும் அளவுகோல்களும் அவருக்கு விளக்கப்பட்டதாகவும் எஸ்பி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

சனிக்கிழமையன்று இந்தியாவில் தங்குவதற்கான விசாவை ஒரு வருடம் நீட்டிக்க விண்ணப்பித்தார்.

“இந்திய குடிமகனை திருமணம் செய்து கொண்டதன் அடிப்படையில் அவருக்கு நீட்டிப்பு கிடைக்க வாய்ப்புள்ளது” என்று எஸ்பி மேலும் கூறினார்.

விக்னேஸ்வரி இலங்கையில் பலாங்கொடை, பத்தனாவத்த, இலுக்கும்புர, ஒபநாயக்கபுர என்ற முகவரியை சேர்ந்தவர்.

மேலும் எதிர்காலத்தில் சட்ட சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க, திருமணத்தை பதிவு செய்து கொள்ளுமாறு தம்பதியினருக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


பேஸ்புக் காதலனை தேடி இந்தியாவின் ஆந்திர மாநிலத்துக்கு சென்ற இலங்கை தமிழ் யுவதி samugammedia இலங்கையைச் சேர்ந்த இளம் யுவதியொருவர் தனது பேஸ்புக் காதலனுடன் வாழ்வதற்காக இந்தியாவின் ஆந்திர பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.சிவகுமாரி விக்னேஷ்வரி (25) என்ற பெண், தனது 6 ஆண்டுகால பேஸ்புக் நண்பரான லட்சுமணனை (28) திருமணம் செய்து கொள்ள சுற்றுலா விசாவில் இந்தியா சென்றுள்ளார்.பேஸ்புக் காதலன் லட்சுமணன், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.இலங்கைப் பெண் பேஸ்புக் காதலனை தேடி வந்த செய்தி ஆந்திராவில் சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, ஓகஸ்ட் 15 ஆம் திகதி விசா காலாவதியாகும் முன் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது நீட்டிப்பு பெற வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த பின்னர், விக்னேஸ்வரி ஜூலை 8ஆம் திகதி ஆந்திராவுக்கு வந்தார். ஜூலை 20ஆம் தேதி சித்தூர் மாவட்டம் வி கோட்டாவில் உள்ள சாயிபாபா கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.வி கோட்டா மண்டலத்தைச் சேர்ந்த அரிமகுலப்பள்ளியைச் சேர்ந்த மேசன் தொழிலாளியான லட்சுமணன், இலங்கையைச் சேர்ந்த விக்னேஷ்வரியுடன் பேஸ்புக்கில் 2017இல் அறிமுகமானார். விக்னேஷ்வரி ஜூலை 8ஆம் திகதி கொழும்பில் இருந்து சுற்றுலா விசாவில் சென்னை வந்தடைந்தார். அவரை வரவேற்க லட்சுமணன் சென்னை சென்றார். பின்னர் காதலியை வீட்டிற்கு அழைத்து வந்தார். லட்சுமணனின் குடும்பத்தினர் சம்மதத்துடன் ஜூலை 20ம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.ஆனால் சித்தூர் மாவட்ட போலீசார் தம்பதியை தங்கள் முன் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.விக்னேஷ்வரியின் விசா ஓகஸ்ட் 15ஆம் திகதியுடன் முடிவடைவதால், சித்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) ஒய் ரிஷாந்த் ரெட்டி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.அதற்குள் அவர் இலங்கை திரும்ப வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.ஆனால் விக்னேஷ்வரி தனது நாட்டிற்குத் திரும்ப மறுத்து, அவர் தனது கணவருடன் நிரந்தரமாக தங்குவதற்கு இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.விக்னேஷ்வரி இந்தியக் குடியுரிமையைப் பெறத் திட்டமிட்டுள்ளதாகவும், நடைமுறை மற்றும் அளவுகோல்களும் அவருக்கு விளக்கப்பட்டதாகவும் எஸ்பி ஊடகங்களிடம் தெரிவித்தார்.சனிக்கிழமையன்று இந்தியாவில் தங்குவதற்கான விசாவை ஒரு வருடம் நீட்டிக்க விண்ணப்பித்தார்.“இந்திய குடிமகனை திருமணம் செய்து கொண்டதன் அடிப்படையில் அவருக்கு நீட்டிப்பு கிடைக்க வாய்ப்புள்ளது” என்று எஸ்பி மேலும் கூறினார்.விக்னேஸ்வரி இலங்கையில் பலாங்கொடை, பத்தனாவத்த, இலுக்கும்புர, ஒபநாயக்கபுர என்ற முகவரியை சேர்ந்தவர்.மேலும் எதிர்காலத்தில் சட்ட சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க, திருமணத்தை பதிவு செய்து கொள்ளுமாறு தம்பதியினருக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement