• May 01 2024

ஈரானால் கைப்பற்றப்பட்ட எண்ணெய் தாங்கி கப்பலில் இலங்கையர்களும்! samugammedia

Chithra / May 8th 2023, 8:02 am
image

Advertisement

ஈரானால் அண்மையில் கைப்பற்றப்பட்ட எண்ணெய் கப்பலின் பணியாளர்களில் இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று தி அசோசியேட்டட் பிரஸ் (AP) ஆய்வு செய்த செயற்கைக்கோள் புகைப்படங்களின் படி, ஈரானிய கடற்படையினரால் அண்மையில் கைப்பற்றப்பட்ட 2 எண்ணெய் கப்பல்கள், ஈரானின் முக்கிய துறைமுக நகரங்களில் ஒன்றான ஹார்முஸ் கடற்கரையில் நங்கூரமிடப்பட்டுள்ளன.

குறித்த 2 கப்பல்களும் வெவ்வேறு காரணங்களுக்காக கைப்பற்றப்பட்ட போதிலும், அணுசக்தி திட்டம் தொடர்பாக மேற்கத்திய நாடுகளுடன் ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியில் கைப்பற்றப்பட்டவையாகும் என்பது தெளிவாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ஷல் தீவுகள் கொடியுடன் கூடிய எட்வான்டேஜ் ஸ்வீட் என்ற கப்பல் முதலில் ஏப்ரல் 27 ஆம் திகதியன்று ஈரானால் கைப்பற்றப்பட்டது.

அதில் 23 இந்தியர்களும் ஒரு ரஷ்ய பிரஜையும், பணியமர்த்தப்பட்டிருந்தனர். இந்தகப்பல், தமது பயணத்தில் எந்த ஒழுங்கற்ற நடத்தையையும் காட்டவில்லை என்றாலும், கப்பல் மற்றொரு கப்பலைத் தாக்கியதன் காரணமாகவே கைப்பற்றப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இந்த எட்வான்டேஜ் ஸ்வீட் கப்பல், கலிபோர்னியாவின் சான் ரமோனைச் சேர்ந்த அமெரிக்க எரிசக்தி நிறுவனமான செவ்ரான் கோர்ப்பரேஷனுக்காக குவைத்தின் மசகு எண்ணெயை எடுத்துச் சென்றது.

இதனையடுத்து கடந்த புதன்கிழமையன்று, ஈரானின் துணை இராணுவப் புரட்சிக் காவலர்களால், இரண்டாவது கப்பலான பனாமாவின் நியோவி கப்பல், ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள புஜைராவுக்குச் செல்லும்போது கைப்பற்றப்பட்டது.

இந்தக் கப்பலிலேயே, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை கடற்படையினர் பணியாற்றியதாக கிரேக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

ஈரானால் கைப்பற்றப்பட்ட எண்ணெய் தாங்கி கப்பலில் இலங்கையர்களும் samugammedia ஈரானால் அண்மையில் கைப்பற்றப்பட்ட எண்ணெய் கப்பலின் பணியாளர்களில் இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று தி அசோசியேட்டட் பிரஸ் (AP) ஆய்வு செய்த செயற்கைக்கோள் புகைப்படங்களின் படி, ஈரானிய கடற்படையினரால் அண்மையில் கைப்பற்றப்பட்ட 2 எண்ணெய் கப்பல்கள், ஈரானின் முக்கிய துறைமுக நகரங்களில் ஒன்றான ஹார்முஸ் கடற்கரையில் நங்கூரமிடப்பட்டுள்ளன.குறித்த 2 கப்பல்களும் வெவ்வேறு காரணங்களுக்காக கைப்பற்றப்பட்ட போதிலும், அணுசக்தி திட்டம் தொடர்பாக மேற்கத்திய நாடுகளுடன் ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியில் கைப்பற்றப்பட்டவையாகும் என்பது தெளிவாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மார்ஷல் தீவுகள் கொடியுடன் கூடிய எட்வான்டேஜ் ஸ்வீட் என்ற கப்பல் முதலில் ஏப்ரல் 27 ஆம் திகதியன்று ஈரானால் கைப்பற்றப்பட்டது.அதில் 23 இந்தியர்களும் ஒரு ரஷ்ய பிரஜையும், பணியமர்த்தப்பட்டிருந்தனர். இந்தகப்பல், தமது பயணத்தில் எந்த ஒழுங்கற்ற நடத்தையையும் காட்டவில்லை என்றாலும், கப்பல் மற்றொரு கப்பலைத் தாக்கியதன் காரணமாகவே கைப்பற்றப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.இந்த எட்வான்டேஜ் ஸ்வீட் கப்பல், கலிபோர்னியாவின் சான் ரமோனைச் சேர்ந்த அமெரிக்க எரிசக்தி நிறுவனமான செவ்ரான் கோர்ப்பரேஷனுக்காக குவைத்தின் மசகு எண்ணெயை எடுத்துச் சென்றது.இதனையடுத்து கடந்த புதன்கிழமையன்று, ஈரானின் துணை இராணுவப் புரட்சிக் காவலர்களால், இரண்டாவது கப்பலான பனாமாவின் நியோவி கப்பல், ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள புஜைராவுக்குச் செல்லும்போது கைப்பற்றப்பட்டது.இந்தக் கப்பலிலேயே, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை கடற்படையினர் பணியாற்றியதாக கிரேக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement