• May 18 2024

சிறிலங்காவின் சவாலான தீர்மானங்கள் - பணவீக்கத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

Tamil nila / Dec 31st 2022, 6:54 pm
image

Advertisement

சிறிலங்கா அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட சவாலான தீர்மானங்கள் காரணமாக பொருளாதாரம் படிப்படியாக ஸ்திரத்தன்மை அடைந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.


மேலும் அடுத்தடுத்த மாதங்களில் தொடர்சியாக பணவீக்கம் குறைந்திருப்பது பொருளாதாரம் சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதற்கான அறிகுறியாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 


கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பிரதான பணவீக்கம் கடந்த நவம்பர் மாதம் 61 வீதமாக இருந்த போதிலும் டிசம்பர் மாதம் அது 57.2 வீதமாக குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


உணவுப் பணவீக்கமும் நவம்பர் மாதத்தில் 73.7 வீதத்தில் இருந்து டிசம்பர் மாதம் 64.4 வீதமாக குறைந்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம் 54.5 வீதமாக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் டிசம்பர் மாதம் 53.4 வீதமாக குறைந்துள்ளது.


அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்கா மத்திய வங்கியின் இரண்டு மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பொருளாதார மீட்பிற்கான கடனை பெற முடியும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.


சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட உடன்படிக்கை எட்டப்பட்டுள்ள நிலையில், இருதரப்பு கடன் வழங்குநர்களிடம் இருந்து கடன் மறுசீரமைப்புக்கான உத்தரவாதத்தை பெறுவதற்கான பேச்சுக்களை இலங்கை முன்னெடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவின் சவாலான தீர்மானங்கள் - பணவீக்கத்தில் ஏற்படவுள்ள மாற்றம் சிறிலங்கா அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட சவாலான தீர்மானங்கள் காரணமாக பொருளாதாரம் படிப்படியாக ஸ்திரத்தன்மை அடைந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.மேலும் அடுத்தடுத்த மாதங்களில் தொடர்சியாக பணவீக்கம் குறைந்திருப்பது பொருளாதாரம் சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதற்கான அறிகுறியாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பிரதான பணவீக்கம் கடந்த நவம்பர் மாதம் 61 வீதமாக இருந்த போதிலும் டிசம்பர் மாதம் அது 57.2 வீதமாக குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.உணவுப் பணவீக்கமும் நவம்பர் மாதத்தில் 73.7 வீதத்தில் இருந்து டிசம்பர் மாதம் 64.4 வீதமாக குறைந்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம் 54.5 வீதமாக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் டிசம்பர் மாதம் 53.4 வீதமாக குறைந்துள்ளது.அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்கா மத்திய வங்கியின் இரண்டு மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பொருளாதார மீட்பிற்கான கடனை பெற முடியும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட உடன்படிக்கை எட்டப்பட்டுள்ள நிலையில், இருதரப்பு கடன் வழங்குநர்களிடம் இருந்து கடன் மறுசீரமைப்புக்கான உத்தரவாதத்தை பெறுவதற்கான பேச்சுக்களை இலங்கை முன்னெடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement