நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த வருடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி உயர்கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் சாமர சம்பத் தசநாயக்க எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், ஆசிரியர் கலாசாலைகளில் இருந்து வெளியேறும் ஆசிரியர்களுக்கும் இந்த வருடத்திற்குள் நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த வகையில் இந்த வருடத்திற்குள் பெரும்பாலான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும் என்றும் அவர் சபையில் நம்பிக்கை வெளியிட்டார்.
நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த வருடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி உயர்கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் சாமர சம்பத் தசநாயக்க எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.அத்துடன், ஆசிரியர் கலாசாலைகளில் இருந்து வெளியேறும் ஆசிரியர்களுக்கும் இந்த வருடத்திற்குள் நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.அந்த வகையில் இந்த வருடத்திற்குள் பெரும்பாலான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும் என்றும் அவர் சபையில் நம்பிக்கை வெளியிட்டார்.