• Feb 11 2025

43 எம்.பிக்கள் பெற்ற நட்டயீட்டை மீளப்பெற நடவடிக்கை - விரைவில் சிலர் கைதாகலாம்! அநுர அரசு அதிரடி அறிவிப்பு

Chithra / Feb 10th 2025, 10:57 am
image


நாட்டின் அசாதாரண காலத்தில் போது வீடுகள் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதாகத் தெரிவித்து 43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும். இது நாடு என்ற வகையில் செலுத்த வேண்டிய நட்டயீடு அல்ல. அது அவர்கள் செய்த விடயங்களுக்கு கிடைத்த பலனாகும் என தொழில் கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஒரு சிலர் அரசாங்கத்துக்கு எதிராக சூழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளனர்.

அவர்களது ஊழல் மோசடி தொடர்பில் விடயங்கள் வெளிக்கொணரும் போது அரசாங்கத்துக்கு எதிராக சதி முயற்சிகளை மேற்கொள்கிறனர்.

எதிர்வரும் நாட்களில் சிலர் கைது செய்யப்படலாம். இதற்கு அச்சம் கொண்டுள்ள ஒரு தரப்பு எம்மை இலக்கு வைத்து சில விடயங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

எவ்வாறாயினும் இந்த அரசாங்கம் தொடர்பில் மக்களிடத்தில் தெளிவு உள்ளது.  எனவே எமக்கு வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம்.

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் 122 கோடி ரூபா நட்டயீடு பெற்றுக்கொண்டமை தொடர்பில் எதிர்காலத்தில்  வழக்கு தொடுத்து அதனை இரட்டிப்பாக அல்லது மும்மடங்காக அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.  என்றார்.

43 எம்.பிக்கள் பெற்ற நட்டயீட்டை மீளப்பெற நடவடிக்கை - விரைவில் சிலர் கைதாகலாம் அநுர அரசு அதிரடி அறிவிப்பு நாட்டின் அசாதாரண காலத்தில் போது வீடுகள் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதாகத் தெரிவித்து 43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும். இது நாடு என்ற வகையில் செலுத்த வேண்டிய நட்டயீடு அல்ல. அது அவர்கள் செய்த விடயங்களுக்கு கிடைத்த பலனாகும் என தொழில் கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.ஒரு சிலர் அரசாங்கத்துக்கு எதிராக சூழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளனர்.அவர்களது ஊழல் மோசடி தொடர்பில் விடயங்கள் வெளிக்கொணரும் போது அரசாங்கத்துக்கு எதிராக சதி முயற்சிகளை மேற்கொள்கிறனர்.எதிர்வரும் நாட்களில் சிலர் கைது செய்யப்படலாம். இதற்கு அச்சம் கொண்டுள்ள ஒரு தரப்பு எம்மை இலக்கு வைத்து சில விடயங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். எவ்வாறாயினும் இந்த அரசாங்கம் தொடர்பில் மக்களிடத்தில் தெளிவு உள்ளது.  எனவே எமக்கு வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம்.43 பாராளுமன்ற உறுப்பினர்கள் 122 கோடி ரூபா நட்டயீடு பெற்றுக்கொண்டமை தொடர்பில் எதிர்காலத்தில்  வழக்கு தொடுத்து அதனை இரட்டிப்பாக அல்லது மும்மடங்காக அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.  என்றார்.

Advertisement

Advertisement

Advertisement