• Jan 11 2025

சபாநாயகருக்கு எதிராக கடும் நடவடிக்கை; எதிர்க்கட்சி எம்.பிக்கள் திட்டம்?

Sharmi / Jan 10th 2025, 2:19 pm
image

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன, பாராளுமன்ற மரபை மதிக்காத காரணத்தினால் எதிர்காலத்தில் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்றக் குழுக்களின் ஆசனங்களை அமைப்பதில் பாரிய சிக்கல்கள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி  உறுப்பினர்கள் குழு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுடன் கலந்துரையாடியுள்ளது.

எவ்வாறாயினும் எதிர்கட்சி எம்.பி.க்கள் எழுப்பிய பிரச்சினைகள் தொடர்பில் சபாநாயகர் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் அதனால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் இடம்பெற்ற தெரிவுக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் குழுவினர் இது தொடர்பில் கேள்வி எழுப்பியதாகவும், அங்கு எழுப்பப்பட்ட விடயங்கள் தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்தவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார்.

எனவே, நாடாளுமன்ற பாரம்பரியத்தை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


சபாநாயகருக்கு எதிராக கடும் நடவடிக்கை; எதிர்க்கட்சி எம்.பிக்கள் திட்டம் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன, பாராளுமன்ற மரபை மதிக்காத காரணத்தினால் எதிர்காலத்தில் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்றக் குழுக்களின் ஆசனங்களை அமைப்பதில் பாரிய சிக்கல்கள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி  உறுப்பினர்கள் குழு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுடன் கலந்துரையாடியுள்ளது.எவ்வாறாயினும் எதிர்கட்சி எம்.பி.க்கள் எழுப்பிய பிரச்சினைகள் தொடர்பில் சபாநாயகர் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் அதனால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மீண்டும் இடம்பெற்ற தெரிவுக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் குழுவினர் இது தொடர்பில் கேள்வி எழுப்பியதாகவும், அங்கு எழுப்பப்பட்ட விடயங்கள் தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்தவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார்.எனவே, நாடாளுமன்ற பாரம்பரியத்தை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement