• Apr 30 2024

காரைநகரில் சட்டவிரோதமாக சந்தை கூடினால் கடுமையான நடவடிக்கை!

Sharmi / Jan 25th 2023, 3:35 pm
image

Advertisement

காரைநகர் பிரதேச சபையின் எல்லைக்குள் சட்டவிரோதமான முறையில் சந்தை கூடினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் காரைநகர் பகுதியில் உள்ள வீதியில் சந்தை கூடியமை தொடர்பில் ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து அவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் காரைநகர் - சக்கலாவோடடை பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் உள்ளூர் உற்பத்திகளை விற்பனை செய்வதற்கான சந்தை தொகுதி ஒன்றினை திறந்து வைத்துள்ளோம்.

இதற்கு முன்னர் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை ஒப்பந்த அடிப்படையில் குத்தகைக்கு எடுத்து அந்த சந்தையில் காணியை அமைத்திருந்தோம். ஆனால் தற்போது எமக்கான ஒரு சந்தை கட்டடத் தொகுதியை நாங்கள் திறந்துள்ளோம். ஆகையால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் உங்களது உற்பத்திகளை சக்கலாவோடை சந்தையில் சந்தைப்படுத்தலாம்.

நாங்கள் குத்தகைக்கு எடுத்த தனியாரின் காணியை இன்றையதினம் (25) காணி உரிமையாளரிடம் ஒப்படைக்கவுள்ளோம். எனவே இனிமேல் அங்கு யாரும் சந்தை கூட முடியாது. அவ்வாறு கூடினால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துடன் வீதிகளில் சட்டவிரோதமாக கூடும் சந்தைகள் மீது பொலிஸார் மற்றும் பொதுமக்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.

எனவே காரைநகர் பகுதி வியாபாரிகள் இனிமேல் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் சட்டவிரோதமாக சந்தை கூடினால் கடுமையான நடவடிக்கை காரைநகர் பிரதேச சபையின் எல்லைக்குள் சட்டவிரோதமான முறையில் சந்தை கூடினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இன்றையதினம் காரைநகர் பகுதியில் உள்ள வீதியில் சந்தை கூடியமை தொடர்பில் ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து அவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,நாங்கள் காரைநகர் - சக்கலாவோடடை பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் உள்ளூர் உற்பத்திகளை விற்பனை செய்வதற்கான சந்தை தொகுதி ஒன்றினை திறந்து வைத்துள்ளோம்.இதற்கு முன்னர் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை ஒப்பந்த அடிப்படையில் குத்தகைக்கு எடுத்து அந்த சந்தையில் காணியை அமைத்திருந்தோம். ஆனால் தற்போது எமக்கான ஒரு சந்தை கட்டடத் தொகுதியை நாங்கள் திறந்துள்ளோம். ஆகையால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் உங்களது உற்பத்திகளை சக்கலாவோடை சந்தையில் சந்தைப்படுத்தலாம்.நாங்கள் குத்தகைக்கு எடுத்த தனியாரின் காணியை இன்றையதினம் (25) காணி உரிமையாளரிடம் ஒப்படைக்கவுள்ளோம். எனவே இனிமேல் அங்கு யாரும் சந்தை கூட முடியாது. அவ்வாறு கூடினால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துடன் வீதிகளில் சட்டவிரோதமாக கூடும் சந்தைகள் மீது பொலிஸார் மற்றும் பொதுமக்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.எனவே காரைநகர் பகுதி வியாபாரிகள் இனிமேல் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement