• May 07 2024

98 லட்சத்தை அசால்ட்டாக விழுங்கிய மாணவன் - காண்டான கலைஞர்கள்!samugammedia

Sharmi / May 2nd 2023, 4:01 pm
image

Advertisement

கலை அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்ட பல லட்சம் மதிப்பிலான கலைப்படைப்பில் இருந்த வாழைப்பழத்தை இளைஞர் ஒருவர் உட்கொண்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியத் தலைநகர் சியோலில்  அமைந்துள்ள லீயம் கலை மியூசியத்திற்கு அங்குள்ள மாணவர் ஒருவர் சென்றுள்ளார்.



அங்கே மியூசியத்தில் டேப்பில் வாழைப்பழம் ஒட்டப்பட்டிருந்த நிலையில், அதை எடுத்து அவர் உண்டுள்ளார்.

இது தொடர்பாக அந்த மாணவன் தான் காலை உணவை உண்ணவில்லை எனவும், அங்கு வந்ததும் தனக்குப் பசியெடுக்கவே சுவரில் ஒட்டப்பட்ட வாழைப்பழத்தைச் சாப்பிட்டதாக கூறியுள்ளார்.

அந்த வழைப்பழமானது  கேட்டலன் என்பவர் உருவாக்கிய  'காமெடியன்' எனப்படும் கலைப்படைப்பின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.

இது கடந்த டிசம்பர் 2019 இல் ஆர்ட் பாசல் மியாமி பீச் என்ற அமைப்பிற்கு $120,000, அதாவது இந்திய மதிப்பில் 98 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

இது குறித்து கேட்டலனிடம் தெரியபடுத்திய போதிலும் அவர்  அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அந்த மியூசியம் சார்பில் கூறியுள்ளனர்.

குறித்த மாணவர் வாழைப்பழத்தை உண்ட பின்னர் டேப்பில் வாழைப்பழ தோலை சாட்டியுள்ளார். அதனை  அகற்றி  பின்னர் புதிய வாழைப்பழத்தை வைத்துள்ளனர்.

இந்த கலைப்படைப்பிலுள்ள வாழைப்பழம் 2 அல்லது 3 நாட்களிற்கு மாற்றப்படுவதாலும் இவ்வாறு வாழைப்பழத்தை அங்கு வருவோர் இதற்கு முன்னரும் உட்கொண்டிருந்ததால் குறித்த மாணவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


98 லட்சத்தை அசால்ட்டாக விழுங்கிய மாணவன் - காண்டான கலைஞர்கள்samugammedia கலை அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்ட பல லட்சம் மதிப்பிலான கலைப்படைப்பில் இருந்த வாழைப்பழத்தை இளைஞர் ஒருவர் உட்கொண்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியத் தலைநகர் சியோலில்  அமைந்துள்ள லீயம் கலை மியூசியத்திற்கு அங்குள்ள மாணவர் ஒருவர் சென்றுள்ளார். அங்கே மியூசியத்தில் டேப்பில் வாழைப்பழம் ஒட்டப்பட்டிருந்த நிலையில், அதை எடுத்து அவர் உண்டுள்ளார். இது தொடர்பாக அந்த மாணவன் தான் காலை உணவை உண்ணவில்லை எனவும், அங்கு வந்ததும் தனக்குப் பசியெடுக்கவே சுவரில் ஒட்டப்பட்ட வாழைப்பழத்தைச் சாப்பிட்டதாக கூறியுள்ளார். அந்த வழைப்பழமானது  கேட்டலன் என்பவர் உருவாக்கிய  'காமெடியன்' எனப்படும் கலைப்படைப்பின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.இது கடந்த டிசம்பர் 2019 இல் ஆர்ட் பாசல் மியாமி பீச் என்ற அமைப்பிற்கு $120,000, அதாவது இந்திய மதிப்பில் 98 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இது குறித்து கேட்டலனிடம் தெரியபடுத்திய போதிலும் அவர்  அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அந்த மியூசியம் சார்பில் கூறியுள்ளனர். குறித்த மாணவர் வாழைப்பழத்தை உண்ட பின்னர் டேப்பில் வாழைப்பழ தோலை சாட்டியுள்ளார். அதனை  அகற்றி  பின்னர் புதிய வாழைப்பழத்தை வைத்துள்ளனர். இந்த கலைப்படைப்பிலுள்ள வாழைப்பழம் 2 அல்லது 3 நாட்களிற்கு மாற்றப்படுவதாலும் இவ்வாறு வாழைப்பழத்தை அங்கு வருவோர் இதற்கு முன்னரும் உட்கொண்டிருந்ததால் குறித்த மாணவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement