• Jun 17 2024

பாடசாலைகளில் இருந்து இடை விலகிய மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்கவும் - ஆளுநர் பணிப்புரை! samugammedia

Tamil nila / May 12th 2023, 4:46 pm
image

Advertisement

வட மாகாண பாடசாலைகளில்  இருந்து  இடை விலகிய மாணவர்களின் விபரங்களை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாகத் தமக்கு அனுப்பி வைக்குமாறு வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த, யாழ். மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் அவர் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

வட மாகாண பாடசாலைகளில் இருந்து  மாணவர்கள் இடைவிலகல்கள் இடம் பெறுவது தொடர்பில்  சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

பாடசாலை மாணவர்கள் இடைவிலகுவது அல்லது கட்டாய விடுகைப் பத்திரம் வழங்குவது தொடர்பில் உரிய அதிகாரிகளின் தலையீடு பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்.

பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்கள் சமூகத்தில் என்ன செய்கிறார்கள் என்பது தொடர்பில் பின் தொடர் அவதானிப்புகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

ஆகவே கடந்த மூன்று வருடங்களில் பாடசாலைகளில் இருந்து இடை விலகிய மாணவர்களின் பெயர் பட்டியலை தமக்கு அனுப்பி வைக்குமாறு ஆளுநர் சகல வலையக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.


பாடசாலைகளில் இருந்து இடை விலகிய மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்கவும் - ஆளுநர் பணிப்புரை samugammedia வட மாகாண பாடசாலைகளில்  இருந்து  இடை விலகிய மாணவர்களின் விபரங்களை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாகத் தமக்கு அனுப்பி வைக்குமாறு வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணிப்புரை விடுத்துள்ளார்.கடந்த, யாழ். மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் அவர் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,வட மாகாண பாடசாலைகளில் இருந்து  மாணவர்கள் இடைவிலகல்கள் இடம் பெறுவது தொடர்பில்  சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.பாடசாலை மாணவர்கள் இடைவிலகுவது அல்லது கட்டாய விடுகைப் பத்திரம் வழங்குவது தொடர்பில் உரிய அதிகாரிகளின் தலையீடு பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்.பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்கள் சமூகத்தில் என்ன செய்கிறார்கள் என்பது தொடர்பில் பின் தொடர் அவதானிப்புகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.ஆகவே கடந்த மூன்று வருடங்களில் பாடசாலைகளில் இருந்து இடை விலகிய மாணவர்களின் பெயர் பட்டியலை தமக்கு அனுப்பி வைக்குமாறு ஆளுநர் சகல வலையக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement