தீக்காயங்களுடன் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு

அடுப்புகளை பற்றவைக்க மண்ணெண்ணெய்க்குப் பதிலாக பெற்றோலைப் பயன்படுத்துவதால் தீக்காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் கயான் ஏகநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் வரிசையில் நிற்கும் வாகனங்களுக்கு பெற்றோல் கிடைக்கிறது.

மேலும், வீடுகளில் எண்ணெய்னையினை சேமித்து வைப்பதனாலும் இது போன்ற ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோலைக் கையாள்வது இலகுவானது அல்ல எனவும், ஆபத்து மிக அதிகம் எனவும் கலாநிதி கயான் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை