• Apr 28 2024

விமானத்துக்குள் திடீரென பெய்த மழை...! அதிர்ச்சியடைந்த பயணிகள்...!samugammedia

Sharmi / Nov 30th 2023, 11:08 am
image

Advertisement

டெல்லியில் இருந்து லண்டன் கேட்விக் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்திற்குள் நீர் கசிவு ஏற்பட்டு மழை போல் பொழிந்தமையினால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதேவேளை விமானத்தின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிவதால் பயணிகள் அச்சப்பட வேண்டாம் என்றும் விமானி பயணிகளுக்கு அறிவித்தல் விடுத்தார்.

இது தொடர்பான காணொளியை குறித்த விமானத்தில் பயணித்த பயணியொருவர் காணொளியாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய  அந்த காணொளி தற்போது வைரலாக பரவி வருகின்றது.

எவ்வாறெனினும்,  குறித்த காணொளியின் நம்பகத்தன்மை மற்றும் திகதி என்பன சுயாதீனமாக ஆராயப்படவில்லை என்றும் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதேவேளை குளிர்சாதன அமைப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இச் சம்பவம்  இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.




விமானத்துக்குள் திடீரென பெய்த மழை. அதிர்ச்சியடைந்த பயணிகள்.samugammedia டெல்லியில் இருந்து லண்டன் கேட்விக் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்திற்குள் நீர் கசிவு ஏற்பட்டு மழை போல் பொழிந்தமையினால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அதேவேளை விமானத்தின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிவதால் பயணிகள் அச்சப்பட வேண்டாம் என்றும் விமானி பயணிகளுக்கு அறிவித்தல் விடுத்தார்.இது தொடர்பான காணொளியை குறித்த விமானத்தில் பயணித்த பயணியொருவர் காணொளியாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய  அந்த காணொளி தற்போது வைரலாக பரவி வருகின்றது.எவ்வாறெனினும்,  குறித்த காணொளியின் நம்பகத்தன்மை மற்றும் திகதி என்பன சுயாதீனமாக ஆராயப்படவில்லை என்றும் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.அதேவேளை குளிர்சாதன அமைப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இச் சம்பவம்  இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement