• May 19 2024

சுமந்திரனுக்கு நாடாளுமன்றத்தில் பௌத்த தேரர் புகழாரம்.! டீல் பேசிய அமைச்சர்..!கிழிக்கப்பட்ட முகத்திரை.!samugammedia

Sharmi / Jun 21st 2023, 3:24 pm
image

Advertisement

தமிழ் சிங்கள இனவாதமின்றி தெளிவான விளக்கத்தினை எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்திருந்தாக எமது மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அத்துரலியே ரத்தன தேர் இவ்வாறு சுமந்திரனுக்கு புகழாரம் சூட்டியிருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் இன்றைய உரை, தமிழ் சிங்கள இனவாதமின்றி தனியார் மயப்படுத்தலின் இடம்பெறும் கொள்ளையை, விரிவாக வெளிப்படுத்தியிருந்தாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஊழல் ஒழிப்பு சட்டமூலத்திற்கு நாம் ஒத்துழைப்பு வழங்குகிறோம்.ஆனால் இந்த சட்டமூலத்தின் மூலம் எதிர்பார்ப்பு நிறைவேறுமா.?? உதாரணமாக ஜப்பான் தூதுவர் காரியாலயத்தில்
எயார் லங்கா விமானம் தொடர்பிலான அல்லது வேறு அரசநிறுவனங்கள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் ஒருவர் டீல் பேசியதாக ஜப்பான் தூதுவர் காரியாலயம் வெளிப்படுத்தியிருந்தது.

ஆனால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் இன்றும் அமைச்சரவை அமைச்சராக பதவி வகிக்கின்றார்.

பொஜன பெரமுன கட்சிக்கு மக்கள் மூன்றில் இரண்டு பெருமான்மையை வழங்கியிருந்தனர். எதற்கு தேர்தல் பிரசாரத்தின்போது பொதுஜன பெரமுன கட்சி மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியது.

குறிப்பாக மத்திய வங்கி பிணைமுறி மோசடியை ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டார் என மக்கள் மத்தியில் அந்த கருத்தை சமூகமயப்படுத்தியே தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.
ஆனால் இன்று அவர்களே அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.

சுமந்திரனுக்கு நாடாளுமன்றத்தில் பௌத்த தேரர் புகழாரம். டீல் பேசிய அமைச்சர்.கிழிக்கப்பட்ட முகத்திரை.samugammedia தமிழ் சிங்கள இனவாதமின்றி தெளிவான விளக்கத்தினை எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்திருந்தாக எமது மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேர் புகழாரம் சூட்டியுள்ளார்.இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அத்துரலியே ரத்தன தேர் இவ்வாறு சுமந்திரனுக்கு புகழாரம் சூட்டியிருந்தார்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் இன்றைய உரை, தமிழ் சிங்கள இனவாதமின்றி தனியார் மயப்படுத்தலின் இடம்பெறும் கொள்ளையை, விரிவாக வெளிப்படுத்தியிருந்தாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த ஊழல் ஒழிப்பு சட்டமூலத்திற்கு நாம் ஒத்துழைப்பு வழங்குகிறோம்.ஆனால் இந்த சட்டமூலத்தின் மூலம் எதிர்பார்ப்பு நிறைவேறுமா. உதாரணமாக ஜப்பான் தூதுவர் காரியாலயத்தில் எயார் லங்கா விமானம் தொடர்பிலான அல்லது வேறு அரசநிறுவனங்கள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் ஒருவர் டீல் பேசியதாக ஜப்பான் தூதுவர் காரியாலயம் வெளிப்படுத்தியிருந்தது.ஆனால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் இன்றும் அமைச்சரவை அமைச்சராக பதவி வகிக்கின்றார்.பொஜன பெரமுன கட்சிக்கு மக்கள் மூன்றில் இரண்டு பெருமான்மையை வழங்கியிருந்தனர். எதற்கு தேர்தல் பிரசாரத்தின்போது பொதுஜன பெரமுன கட்சி மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியது.குறிப்பாக மத்திய வங்கி பிணைமுறி மோசடியை ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டார் என மக்கள் மத்தியில் அந்த கருத்தை சமூகமயப்படுத்தியே தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.ஆனால் இன்று அவர்களே அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement