சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் எதிர்வரும் மார்ச் மாத மத்தியில் பூமிக்கு மீண்டும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் ஆய்வுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர்.
இவர்கள் இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப இருந்த நிலையில், இவர்கள் பயணித்த ஸ்டார் லைனர் விண்கலத்தில் விண்கலத்தின் த்ரஸ்டர்களில் கோளாறு, வாயு கசிவும் கண்டறியப்பட்டதால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் அவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கியுள்ளனர்.
அதேவேளை, அவர்கள் அங்கு நலமுடன் இருக்கிறார்கள் என தெரிவித்த அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, அவர்கள் விரைவில் பூமி திரும்புவார்கள் என குறிப்பிட்டது.
இந்நிலையில் அவர்களை பூமிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அத்துடன், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்டுக் கொண்டு வருவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விரைவில் ரொக்கெட் அனுப்பவுள்ளது என நாசா அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் மார்ச் 12ஆம் திகதி இந்த ரொக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என தெரியவந்துள்ளது.
இதன்மூலம் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்; நாசாவின் புதிய அறிவிப்பு. சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் எதிர்வரும் மார்ச் மாத மத்தியில் பூமிக்கு மீண்டும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் ஆய்வுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர். இவர்கள் இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப இருந்த நிலையில், இவர்கள் பயணித்த ஸ்டார் லைனர் விண்கலத்தில் விண்கலத்தின் த்ரஸ்டர்களில் கோளாறு, வாயு கசிவும் கண்டறியப்பட்டதால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.இந்நிலையில் அவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கியுள்ளனர். அதேவேளை, அவர்கள் அங்கு நலமுடன் இருக்கிறார்கள் என தெரிவித்த அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, அவர்கள் விரைவில் பூமி திரும்புவார்கள் என குறிப்பிட்டது.இந்நிலையில் அவர்களை பூமிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அத்துடன், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்டுக் கொண்டு வருவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விரைவில் ரொக்கெட் அனுப்பவுள்ளது என நாசா அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் மார்ச் 12ஆம் திகதி இந்த ரொக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என தெரியவந்துள்ளது.இதன்மூலம் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.