• Sep 08 2024

இலங்கையர்களுக்கு ஆதரவு வழங்குங்கள்! – தென்கொரியாவில் உலக தலைவர்களிடம் கோரிக்கை விடுத்த மைத்திரி SamugamMedia

Chithra / Feb 27th 2023, 1:57 pm
image

Advertisement

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு ஆதரவையும் உதவிகளையும் வழங்குமாறு உலகத் தலைவர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்கொரியாவின் சியோலில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சிரேஷ்ட அரசியல் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

இக்கட்டான காலங்களில் இலங்கையின் அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் ஆதரவற்ற மற்றும் வறிய மக்களுக்கு அனைவரின் ஒத்துழைப்பையும் சகோதரத்துவத்தையும் எதிர்பார்ப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாடு வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்வதற்கு, அதன் நோக்கத்திற்கு நேர்மையான அரசாங்கக் கட்சியும், குறுகிய அரசியல் இலக்குகளுக்கு அப்பால் சிந்திக்கும் முற்போக்கான எதிர்க்கட்சியும் இருப்பது முக்கியம் எனவும், தென்னாபிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா போன்ற உண்மையான நேர்மையான தலைவர்கள் அநியாயமாக பலவிதமான தண்டனைகளை அனுபவிக்க நேரிட்டதாகவும், அது இயல்பு என்றும், நீதியை அரசியலாக்குவதே இதற்குக் காரணம் என்றும், அனைத்தையும் அமைதியாக தாங்கும் தலைவர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.


இலங்கையர்களுக்கு ஆதரவு வழங்குங்கள் – தென்கொரியாவில் உலக தலைவர்களிடம் கோரிக்கை விடுத்த மைத்திரி SamugamMedia பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு ஆதரவையும் உதவிகளையும் வழங்குமாறு உலகத் தலைவர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.தென்கொரியாவின் சியோலில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சிரேஷ்ட அரசியல் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.இக்கட்டான காலங்களில் இலங்கையின் அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் ஆதரவற்ற மற்றும் வறிய மக்களுக்கு அனைவரின் ஒத்துழைப்பையும் சகோதரத்துவத்தையும் எதிர்பார்ப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.ஒரு நாடு வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்வதற்கு, அதன் நோக்கத்திற்கு நேர்மையான அரசாங்கக் கட்சியும், குறுகிய அரசியல் இலக்குகளுக்கு அப்பால் சிந்திக்கும் முற்போக்கான எதிர்க்கட்சியும் இருப்பது முக்கியம் எனவும், தென்னாபிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா போன்ற உண்மையான நேர்மையான தலைவர்கள் அநியாயமாக பலவிதமான தண்டனைகளை அனுபவிக்க நேரிட்டதாகவும், அது இயல்பு என்றும், நீதியை அரசியலாக்குவதே இதற்குக் காரணம் என்றும், அனைத்தையும் அமைதியாக தாங்கும் தலைவர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement