• May 18 2024

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய விவகாரம்..! யாழின் முக்கிய பகுதிகளில் போராட்டம் இன்று ..!samugammedia

Sharmi / Aug 5th 2023, 8:27 am
image

Advertisement

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின்னர் அவருடன் தொடர்புபட்ட மரமாக சித்திரித்து வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றையதினம் வலி மேற்கில் இரு இடங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பறாளாய் முருகன் கோவிலிலுள்ள அரசமரம் சங்கமித்தையால் நடப்பட்டது என்றும், இதனால் அந்தப் பகுதி தொல்பொருள் அடையாளம் என்றும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக இன்று போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சங்கானையில் இன்று பி.ப. 3 மணிக்கு போராட்டமொன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை - சுழிபுரம் சந்திப் பகுதியில் இன்று மு.ப. 10 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் மற்றொரு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இந்தப் போராட்டம் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்ததாவது:-

வரலாற்றினை திரிபுபடுத்தும் சிங்கள அரசு, தற்போது இன்னும் ஒருபடி மேல் சென்று சுழிபுரம் பறாளாய் முருகன் ஆல யத்தின் வரலாற்றையும் திரிபடையச் செய்துள்ளது. சங்கமித்தை இலங் கைக்கு வருகைதந்த ஆண்டாக கி.மு.மூன்றாம் நூற்றாண்டு காணப்படுகின்றது. ஆனால், சுழிபுரம் பறாளாய் ஆலயம் 1798ஆம் ஆண்டிலேயே அமைக்கப்பட்டது.

ஆலயம் அமைக்கப்படும் போது அந்த வளாகத்தில் அரச மரங்கள் எவையும் காணப்படவில்லை என்று ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். இதிலிருந்து திட்டமிட்ட பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு அமைய வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டமை தெளிவாகின்றது.

எனவே, சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக யாழ்ப்பாணம், சுழிபுரம் சந்தியில் நாளை (இன்று) மு.ப. 10 மணியளவில் போராட் டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களும் ஆர்வலர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு போராட் டத்தை மேலும் வலுச்சேர்க்கவேண்டும் என்றனர்.

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய விவகாரம். யாழின் முக்கிய பகுதிகளில் போராட்டம் இன்று .samugammedia சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின்னர் அவருடன் தொடர்புபட்ட மரமாக சித்திரித்து வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இன்றையதினம் வலி மேற்கில் இரு இடங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பறாளாய் முருகன் கோவிலிலுள்ள அரசமரம் சங்கமித்தையால் நடப்பட்டது என்றும், இதனால் அந்தப் பகுதி தொல்பொருள் அடையாளம் என்றும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக இன்று போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சங்கானையில் இன்று பி.ப. 3 மணிக்கு போராட்டமொன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை - சுழிபுரம் சந்திப் பகுதியில் இன்று மு.ப. 10 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் மற்றொரு போராட்டம் நடத்தப்படவுள்ளது.இந்தப் போராட்டம் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்ததாவது:-வரலாற்றினை திரிபுபடுத்தும் சிங்கள அரசு, தற்போது இன்னும் ஒருபடி மேல் சென்று சுழிபுரம் பறாளாய் முருகன் ஆல யத்தின் வரலாற்றையும் திரிபடையச் செய்துள்ளது. சங்கமித்தை இலங் கைக்கு வருகைதந்த ஆண்டாக கி.மு.மூன்றாம் நூற்றாண்டு காணப்படுகின்றது. ஆனால், சுழிபுரம் பறாளாய் ஆலயம் 1798ஆம் ஆண்டிலேயே அமைக்கப்பட்டது. ஆலயம் அமைக்கப்படும் போது அந்த வளாகத்தில் அரச மரங்கள் எவையும் காணப்படவில்லை என்று ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். இதிலிருந்து திட்டமிட்ட பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு அமைய வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டமை தெளிவாகின்றது. எனவே, சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக யாழ்ப்பாணம், சுழிபுரம் சந்தியில் நாளை (இன்று) மு.ப. 10 மணியளவில் போராட் டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களும் ஆர்வலர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு போராட் டத்தை மேலும் வலுச்சேர்க்கவேண்டும் என்றனர்.

Advertisement

Advertisement

Advertisement