• May 18 2024

தமிழரசு கட்சியின் தீர்மானம் தவறானது - இரா.துரைரெட்னம்

Chithra / Jan 9th 2023, 5:55 pm
image

Advertisement

தமிழர்களைப்பொறுத்த வரையில் ஒற்றுமையின் சின்னம் வீடு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து கட்சிகளையும் பயன்படுத்தி வீட்டுச்சின்னத்திற்கான அங்கீகாரத்தை எடுத்துவிட்டு ஒரு கட்சி தனியே போட்டியிடுவது என எடுத்த தீர்மானம் மீளாய்வுசெய்யப்படவேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.பின் உபதலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் உள்ள தமிழரசு கட்சி தேர்தலில் தனித்துவமாக செயல்பட முடிவெடுத்திருந்தாலும் கூட அதில் அங்கம் வருகின்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக் கழகம் போன்ற கட்சிகள் அவ்வாறு முடிவுகளை எடுத்து விடாமல், தமிழ் மக்களின் கிழக்கு மாகாண மக்களின் ஏகோபித்த குரலாக ஒற்றுமையாக தமிழ் தலைமைகள் செயல்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஒரு தனி மனித சுதந்திரம், வாக்களிக்கும் உரிமையை அவனுக்கு வழங்கும் செயல் வடிவங்களை மத்திய அரசாங்கம் வழங்க வேண்டும்.

இலங்கை அரசாங்கம் உள்ளூராட்சி சபை தேர்தல்களை மிக விரைவாக நடத்துவதற்கு தடுப்புச் சுவர்களை அமைக்காமல், தேர்தல் ஆணைக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தேர்தல் ஆணைக்குழு அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இறமையுடன் தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். 

அதை விடுத்து இந்த தேர்தலை நிறுத்துவதற்கும் நொமினேஷன் தாக்கல் செய்யப்பட்டதற்கு பின் ஒத்தி வைப்பதற்கும் எடுக்கப்படுகின்ற முடிவுகள் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடு.

தேர்தல் தொடர்பான சம்பந்தப்பட்ட விடயத்தில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் மத்திய குழுவாகிய நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் சுரேஷ் பிரேமச்சந்திரன் வழிகாட்டுதலின் கீழ் பெயரில் மத்திய குழு கூட்டம் நடைபெற்றது இந்த மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் வளர்ச்சி பெற வேண்டுமாயின் ஒற்றுமையின் கீழ் தேர்தலில் போட்டியிட வேண்டும் என எமது கட்சி தீர்மானித்துள்ளது. 

இதற்கு அமைவாக இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு எமது கட்சித் தலைமையிடம் நாங்கள் வேண்டுகோளை விடுத்துள்ளோம்.

இன்றோ நாளையோ சரியான தீர்வு கிடைக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட தேர்தலில் குதிப்பதற்கான தயார் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம்.

இந்த சூழ்நிலையில் ஜனநாயக ரீதியாக வாக்களித்து பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உணர்ந்து இருக்கின்ற நிலையில், இந்த தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

தமிழர் விடுதலை இயக்கம், தமிழர் விடுதலை கழகம், தமிழரசு கட்சி இதில் ஒரு கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த மத்திய குழு கூட்டத்தில் தனித்துவமாக உள்ளூராட்சி தேர்தலில் தனியே போட்டியிடுவதால் நன்மைகள், தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சிகள் அதிகம் உள்ளன என்ற எடுக்கப்பட்ட தீர்மானம் அந்த கட்சியின் ஜனநாயக தீர்மானம் ஆகும், அதை நாங்கள் வெறுக்கவில்லை.

ஆனால் கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் , மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளை பொருத்தவரையில் கடந்த காலத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற விடயத்தை பொறுத்தவரையில், தமிழர்கள் ஒரு குடையின் கீழ் அணி திரளப்பட வேண்டும் என்பது தமிழர்களுடைய நிலைப்பாடு.

தமிழ் மக்களை பொருத்தவரையில் ஒற்றுமையே எமது சின்னம் வீடு என்ற அறிவிக்கப்பட்ட நிலையில், வாக்களிக்கப்பட்ட நிலையில் ஒரு கட்சி எல்லா கட்சியையும் பயன்படுத்திக் கொண்டு வீட்டு சின்னத்திற்கான அங்கீகாரத்தை எடுத்து விட்டு, தனியே தேர்தலில் போட்டியிடுவது என்ற தீர்மானம் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

இந்த நிலையில் எமது கட்சியை பொறுத்த வரையில் ஒற்றுமையுடன் செயல்பட நாம் மிகவும் தயாராக உள்ளோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் உள்ள தமிழரசு கட்சி தேர்தலில் தனித்துவமாக செயல்பட முடிவெடுத்திருந்தாலும் கூட அதில் அங்கம் வருகின்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக் கழகம் போன்ற கட்சிகள் அவ்வாறு முடிவுகளை எடுத்து விடாமல் , தமிழ் மக்களின் கிழக்கு மாகாண அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மக்களின் ஏகோபித்த குரலாக ஒலிக்கின்ற ஒற்றுமையாக தமிழ் தலைமைகள் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் நிலை நாட்டுவார்கள் என நாங்கள் நம்புகின்றோம்.

தமிழரசு கட்சி எடுத்திருக்கின்ற தீர்மானம் ஜனநாயக ரீதியாக அவர்களின் முறையில் சரியாக இருந்தாலும், மக்கள் அந்த தீர்மானத்தை விரும்பவில்லை என்ற வழிகாட்டுதல்கள் கடந்த நேற்றைய முன்னைய தினம் வடக்கு கிழக்கு ஆர்ப்பாட்டங்கள்,  அனைவரும் ஒன்றாக சேர வேண்டும், அணி திறள வேண்டும், என்று பல ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ள நிலையில் தமிழீழ விடுதலைக் கழகம்,  தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய கட்சிகள் இந்த விடயத்தில் ஒற்றுமையை நழுவிப் போக விடாமல்,  ஒற்றுமையாக இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான செயல்படிவத்தை கொடுப்பார்கள், அப்படி கொடுத்தால் அதற்கு ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி தனது பங்களிப்புகளை ஒத்துழைப்புகளை நல்குவோம்.

மாகாண சபை முறைமை தொடர்பாக ஒரு சந்தோஷமான நல்ல செய்திகளை நாங்கள் தினந்தோறும் அறியக் கூடியதாக இருக்கின்றது.  குறிப்பாக மாகாண சபை முறைமையை விரைவாக அமல்படுத்துங்கள்,  மாகாண சபை தேர்தலை நடத்துங்கள்.

13 வது திருத்தச் சட்டத்தில் உள்ள விடயங்களை அமல்படுத்துங்கள், என்ற கோரிக்கைகளை தமிழ் சிங்கள கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முதல் முதல் தமிழ்நாட்டில் நடந்த கட்சிகளின் மாநாட்டில் கூட மாகாண சபை முறைமை அமுல்படுத்தப்பட வேண்டும் என்கின்ற நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள கட்சிகளும் மலையகக் கட்சிகளும் மாகாண சபை முறைமையை அமுல்படுத்துங்கள் என்ற நிலையில், எமது நாட்டு  ஜனாதிபதி அவர்கள் அடுத்த வாரம் இந்தியா பயணம் செய்யக் கூடியதை நாம் அறியக் கூடியதாக உள்ளது. 

இந்த நிலையில் இந்தியாவைப் பொறுத்தவரையில் சர்வதேச ரீதியாக ஐக்கிய நாட்டு சபைக்கு கூட மாகாண சபை முறைமையை அமல்படுத்துங்கள் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி அவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்ய உள்ளார்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கையில் அமுலாக்கப்பட்ட இலங்கை இந்தியா ஒப்பந்தம் ஊடாக மாகாண சபை முறைமை அமல்படுத்தப்பட வேண்டும், மாகாண சபை முறைமையில் உள்ள அதிகாரங்கள் சட்ட ரீதியாக சில அதிகாரங்கள் நிறுத்தப்பட்டாலும் அதிக அவற்றை அமல்படுத்தக் கூடியவாறு 13-வது திருத்தச் சட்டத்தில் உள்ள விடயங்களை அமுல்படுத்தக்கூடியவாரும் கிழக்கு மாகாணத்திற்குரிய, வட மாகாணத்திற்குரிய இலங்கையில் மாகாண சபைக்குரிய தேர்தலை விரைவாக நடத்தச் சொல்லக் கூடியவாரும், அதற்கான முழு ஒத்துழைப்புகளையும் அதிகாரங்களையும் அமல்படுத்துவதற்கு இந்தியா இலங்கை ஜனாதிபதியிடம் முன்வைக்க வேண்டும் என பகிரங்கமாக வேண்டுகோளை விடுக்கின்றேன்.


தமிழரசு கட்சியின் தீர்மானம் தவறானது - இரா.துரைரெட்னம் தமிழர்களைப்பொறுத்த வரையில் ஒற்றுமையின் சின்னம் வீடு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து கட்சிகளையும் பயன்படுத்தி வீட்டுச்சின்னத்திற்கான அங்கீகாரத்தை எடுத்துவிட்டு ஒரு கட்சி தனியே போட்டியிடுவது என எடுத்த தீர்மானம் மீளாய்வுசெய்யப்படவேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.பின் உபதலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் உள்ள தமிழரசு கட்சி தேர்தலில் தனித்துவமாக செயல்பட முடிவெடுத்திருந்தாலும் கூட அதில் அங்கம் வருகின்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக் கழகம் போன்ற கட்சிகள் அவ்வாறு முடிவுகளை எடுத்து விடாமல், தமிழ் மக்களின் கிழக்கு மாகாண மக்களின் ஏகோபித்த குரலாக ஒற்றுமையாக தமிழ் தலைமைகள் செயல்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.ஒரு தனி மனித சுதந்திரம், வாக்களிக்கும் உரிமையை அவனுக்கு வழங்கும் செயல் வடிவங்களை மத்திய அரசாங்கம் வழங்க வேண்டும்.இலங்கை அரசாங்கம் உள்ளூராட்சி சபை தேர்தல்களை மிக விரைவாக நடத்துவதற்கு தடுப்புச் சுவர்களை அமைக்காமல், தேர்தல் ஆணைக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தேர்தல் ஆணைக்குழு அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இறமையுடன் தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். அதை விடுத்து இந்த தேர்தலை நிறுத்துவதற்கும் நொமினேஷன் தாக்கல் செய்யப்பட்டதற்கு பின் ஒத்தி வைப்பதற்கும் எடுக்கப்படுகின்ற முடிவுகள் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடு.தேர்தல் தொடர்பான சம்பந்தப்பட்ட விடயத்தில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் மத்திய குழுவாகிய நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் சுரேஷ் பிரேமச்சந்திரன் வழிகாட்டுதலின் கீழ் பெயரில் மத்திய குழு கூட்டம் நடைபெற்றது இந்த மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் வளர்ச்சி பெற வேண்டுமாயின் ஒற்றுமையின் கீழ் தேர்தலில் போட்டியிட வேண்டும் என எமது கட்சி தீர்மானித்துள்ளது. இதற்கு அமைவாக இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு எமது கட்சித் தலைமையிடம் நாங்கள் வேண்டுகோளை விடுத்துள்ளோம்.இன்றோ நாளையோ சரியான தீர்வு கிடைக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட தேர்தலில் குதிப்பதற்கான தயார் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம்.இந்த சூழ்நிலையில் ஜனநாயக ரீதியாக வாக்களித்து பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உணர்ந்து இருக்கின்ற நிலையில், இந்த தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.தமிழர் விடுதலை இயக்கம், தமிழர் விடுதலை கழகம், தமிழரசு கட்சி இதில் ஒரு கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த மத்திய குழு கூட்டத்தில் தனித்துவமாக உள்ளூராட்சி தேர்தலில் தனியே போட்டியிடுவதால் நன்மைகள், தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சிகள் அதிகம் உள்ளன என்ற எடுக்கப்பட்ட தீர்மானம் அந்த கட்சியின் ஜனநாயக தீர்மானம் ஆகும், அதை நாங்கள் வெறுக்கவில்லை.ஆனால் கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் , மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளை பொருத்தவரையில் கடந்த காலத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற விடயத்தை பொறுத்தவரையில், தமிழர்கள் ஒரு குடையின் கீழ் அணி திரளப்பட வேண்டும் என்பது தமிழர்களுடைய நிலைப்பாடு.தமிழ் மக்களை பொருத்தவரையில் ஒற்றுமையே எமது சின்னம் வீடு என்ற அறிவிக்கப்பட்ட நிலையில், வாக்களிக்கப்பட்ட நிலையில் ஒரு கட்சி எல்லா கட்சியையும் பயன்படுத்திக் கொண்டு வீட்டு சின்னத்திற்கான அங்கீகாரத்தை எடுத்து விட்டு, தனியே தேர்தலில் போட்டியிடுவது என்ற தீர்மானம் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.இந்த நிலையில் எமது கட்சியை பொறுத்த வரையில் ஒற்றுமையுடன் செயல்பட நாம் மிகவும் தயாராக உள்ளோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் உள்ள தமிழரசு கட்சி தேர்தலில் தனித்துவமாக செயல்பட முடிவெடுத்திருந்தாலும் கூட அதில் அங்கம் வருகின்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக் கழகம் போன்ற கட்சிகள் அவ்வாறு முடிவுகளை எடுத்து விடாமல் , தமிழ் மக்களின் கிழக்கு மாகாண அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மக்களின் ஏகோபித்த குரலாக ஒலிக்கின்ற ஒற்றுமையாக தமிழ் தலைமைகள் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் நிலை நாட்டுவார்கள் என நாங்கள் நம்புகின்றோம்.தமிழரசு கட்சி எடுத்திருக்கின்ற தீர்மானம் ஜனநாயக ரீதியாக அவர்களின் முறையில் சரியாக இருந்தாலும், மக்கள் அந்த தீர்மானத்தை விரும்பவில்லை என்ற வழிகாட்டுதல்கள் கடந்த நேற்றைய முன்னைய தினம் வடக்கு கிழக்கு ஆர்ப்பாட்டங்கள்,  அனைவரும் ஒன்றாக சேர வேண்டும், அணி திறள வேண்டும், என்று பல ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ள நிலையில் தமிழீழ விடுதலைக் கழகம்,  தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய கட்சிகள் இந்த விடயத்தில் ஒற்றுமையை நழுவிப் போக விடாமல்,  ஒற்றுமையாக இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான செயல்படிவத்தை கொடுப்பார்கள், அப்படி கொடுத்தால் அதற்கு ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி தனது பங்களிப்புகளை ஒத்துழைப்புகளை நல்குவோம்.மாகாண சபை முறைமை தொடர்பாக ஒரு சந்தோஷமான நல்ல செய்திகளை நாங்கள் தினந்தோறும் அறியக் கூடியதாக இருக்கின்றது.  குறிப்பாக மாகாண சபை முறைமையை விரைவாக அமல்படுத்துங்கள்,  மாகாண சபை தேர்தலை நடத்துங்கள்.13 வது திருத்தச் சட்டத்தில் உள்ள விடயங்களை அமல்படுத்துங்கள், என்ற கோரிக்கைகளை தமிழ் சிங்கள கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முதல் முதல் தமிழ்நாட்டில் நடந்த கட்சிகளின் மாநாட்டில் கூட மாகாண சபை முறைமை அமுல்படுத்தப்பட வேண்டும் என்கின்ற நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள கட்சிகளும் மலையகக் கட்சிகளும் மாகாண சபை முறைமையை அமுல்படுத்துங்கள் என்ற நிலையில், எமது நாட்டு  ஜனாதிபதி அவர்கள் அடுத்த வாரம் இந்தியா பயணம் செய்யக் கூடியதை நாம் அறியக் கூடியதாக உள்ளது. இந்த நிலையில் இந்தியாவைப் பொறுத்தவரையில் சர்வதேச ரீதியாக ஐக்கிய நாட்டு சபைக்கு கூட மாகாண சபை முறைமையை அமல்படுத்துங்கள் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி அவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்ய உள்ளார்.இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கையில் அமுலாக்கப்பட்ட இலங்கை இந்தியா ஒப்பந்தம் ஊடாக மாகாண சபை முறைமை அமல்படுத்தப்பட வேண்டும், மாகாண சபை முறைமையில் உள்ள அதிகாரங்கள் சட்ட ரீதியாக சில அதிகாரங்கள் நிறுத்தப்பட்டாலும் அதிக அவற்றை அமல்படுத்தக் கூடியவாறு 13-வது திருத்தச் சட்டத்தில் உள்ள விடயங்களை அமுல்படுத்தக்கூடியவாரும் கிழக்கு மாகாணத்திற்குரிய, வட மாகாணத்திற்குரிய இலங்கையில் மாகாண சபைக்குரிய தேர்தலை விரைவாக நடத்தச் சொல்லக் கூடியவாரும், அதற்கான முழு ஒத்துழைப்புகளையும் அதிகாரங்களையும் அமல்படுத்துவதற்கு இந்தியா இலங்கை ஜனாதிபதியிடம் முன்வைக்க வேண்டும் என பகிரங்கமாக வேண்டுகோளை விடுக்கின்றேன்.

Advertisement

Advertisement

Advertisement