• Apr 27 2025

தமிழர்கள் வாழும் வெருகல் சபையை தமிழரசு கட்சியே ஆட்சி அமைக்க வேண்டும்- வேட்பாளர் கஜரூபன் தெரிவிப்பு

Thansita / Apr 26th 2025, 11:28 am
image

இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக வெருகல் பிரதேச சபையில் வெருகல் வட்டாரத்தில் 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரும், வேட்பாளருமான விக்கினேஸ்வரன் கஜரூபனின் மக்கள் சந்திப்பு இன்று சனிக்கிழமை (26) காலை இடம்பெற்றது.

இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில் -

தனித் தமிழர்கள் வாழ்கின்ற வெருகல் பிரதேச சபையை தமிழரசுக் கட்சியே இதுவரை காலமும் ஆட்சி செய்துள்ளது.

இம்முறையும் தமிழர் ஒருவர் ஆட்சி செய்வதற்கு உரிமை சார்ந்து கொள்கை சார்ந்து மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இம்முறை இலங்கை தமிழரசுக் கட்சி ஊடாக உரிமை சார்ந்த அபிவிருத்தியை கொண்டு செல்லும் நோக்கத்தோடு அனைத்து வேட்பாளர்களும் தேர்தலில் இறங்கியுள்ளோம்.

எமது தாய் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியை வெருகல் பிரதேச மக்கள் ஆதரிக்க வேண்டும்.

பல கட்சிகள் இங்கு வந்து போகக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது இது நமது வாக்குகளை சிதறடிப்தற்காகவே நடக்கின்ற விடயமாகும்.

பல கட்சிகளை ஆதரிக்காமல் இலங்கை தமிழரசு கட்சி ஆதரிப்பதன் ஊடாக அரசாங்கத்திடம் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டிய விடயங்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.


தமிழர்கள் வாழும் வெருகல் சபையை தமிழரசு கட்சியே ஆட்சி அமைக்க வேண்டும்- வேட்பாளர் கஜரூபன் தெரிவிப்பு இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக வெருகல் பிரதேச சபையில் வெருகல் வட்டாரத்தில் 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரும், வேட்பாளருமான விக்கினேஸ்வரன் கஜரூபனின் மக்கள் சந்திப்பு இன்று சனிக்கிழமை (26) காலை இடம்பெற்றது.இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில் -தனித் தமிழர்கள் வாழ்கின்ற வெருகல் பிரதேச சபையை தமிழரசுக் கட்சியே இதுவரை காலமும் ஆட்சி செய்துள்ளது.இம்முறையும் தமிழர் ஒருவர் ஆட்சி செய்வதற்கு உரிமை சார்ந்து கொள்கை சார்ந்து மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இம்முறை இலங்கை தமிழரசுக் கட்சி ஊடாக உரிமை சார்ந்த அபிவிருத்தியை கொண்டு செல்லும் நோக்கத்தோடு அனைத்து வேட்பாளர்களும் தேர்தலில் இறங்கியுள்ளோம்.எமது தாய் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியை வெருகல் பிரதேச மக்கள் ஆதரிக்க வேண்டும்.பல கட்சிகள் இங்கு வந்து போகக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது இது நமது வாக்குகளை சிதறடிப்தற்காகவே நடக்கின்ற விடயமாகும்.பல கட்சிகளை ஆதரிக்காமல் இலங்கை தமிழரசு கட்சி ஆதரிப்பதன் ஊடாக அரசாங்கத்திடம் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டிய விடயங்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement