• Mar 13 2025

முல்லைத்தீவில் கட்டுப்பணத்தைச் செலுத்தியது தமிழரசு

Chithra / Mar 11th 2025, 4:12 pm
image


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியால் இன்று செலுத்தப்பட்டது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, மாந்தைகிழக்கு, துணுக்காய் ஆகிய நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்குரிய கட்டுப்பணம் இவ்வாறு செலுத்தப்பட்டுள்ளது. 

அந்தவகையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் கட்டுப்பணத்தினைச் செலுத்தினார்.

மேலும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களான இரத்தினம் ஜெகதீசன், கிருஸ்ணபிள்ளை சிவகுரு ஆகியோரும் இதில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


முல்லைத்தீவில் கட்டுப்பணத்தைச் செலுத்தியது தமிழரசு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியால் இன்று செலுத்தப்பட்டது.குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, மாந்தைகிழக்கு, துணுக்காய் ஆகிய நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்குரிய கட்டுப்பணம் இவ்வாறு செலுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் கட்டுப்பணத்தினைச் செலுத்தினார்.மேலும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களான இரத்தினம் ஜெகதீசன், கிருஸ்ணபிள்ளை சிவகுரு ஆகியோரும் இதில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement