விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை மொட்டையடித்து அனுப்பியதால், இலங்கை அரசைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கை மனிதாபிமானமற்றது மற்றும் மனித உரிமை மீறல் என்று கூறியே இந்த ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டுள்ளது.
மதுரை - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கடந்த ஒகஸ்ட் 27ஆம் திகதியன்று தொழிலில் ஈடுபட்டிருந்த 8 கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் அவர்களின் இயந்திர படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலைில், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 8 கடற்றொழிலாளர்களும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
இனிமேலும் இவ்வாறான மனிதநேயமற்ற செயலை பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
ஆகவே மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் தழுவிய மாபெரும் போராட்டங்களை தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கும் எதிராகவும் நடத்துவோம் என மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம் விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை மொட்டையடித்து அனுப்பியதால், இலங்கை அரசைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கை மனிதாபிமானமற்றது மற்றும் மனித உரிமை மீறல் என்று கூறியே இந்த ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டுள்ளது.மதுரை - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.கடந்த ஒகஸ்ட் 27ஆம் திகதியன்று தொழிலில் ஈடுபட்டிருந்த 8 கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.அத்துடன் அவர்களின் இயந்திர படகும் பறிமுதல் செய்யப்பட்டது.இந்நிலைில், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 8 கடற்றொழிலாளர்களும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். இனிமேலும் இவ்வாறான மனிதநேயமற்ற செயலை பொறுத்துக் கொள்ள மாட்டோம். ஆகவே மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் தழுவிய மாபெரும் போராட்டங்களை தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கும் எதிராகவும் நடத்துவோம் என மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.