• Nov 23 2024

தமிழ் பெண்கள் பொட்டு, காதணி அணிய தடை விதித்த நிர்வாகம் - குரல் கொடுத்த அமைச்சர் ஜீவன்

Chithra / Jun 1st 2024, 8:56 pm
image

 

பெருந்தோட்டங்களில் பணியில் ஈடுபட்டு வரும் தமிழ் பெண்கள் நெற்றில் சிகப்பு திலகமிடுவதனை தோட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தியதாகவும் அதற்கு எதிராக குரல் கொடுத்ததாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடந்து கொண்ட விதம் தொடர்பில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் ஆக்ரோசமான முறையில் நடந்து கொண்டதாக சமூக ஊடகங்களில் காணொளிகள் வெளியிடப்பட்டிருந்தன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்படாமையை எதிர்த்து தாம் குரல் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் முகாமையாளர்கள் பலவந்தமான அடிப்படையில் பெண் தொழிலாளர்களின் பொட்டுகளை அகற்றுவதாகவும் காதணிகள் அணியக் கூடாது என உத்தரவிடுவதாகவும் இதனை எதிர்த்து தாம் குரல் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தேயிலைக்கு பதிலீடாக சில இடங்களில் கோப்பி செய்கை செய்யப்பட்டதனை எதிர்த்து குரல் எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொறுப்பு வாய்ந்த தொழிற்சங்கம் என்ற வகையில் தாம் இவ்வாறு குரல் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் உரிய பதிலளிக்கப்படவில்லை எனவும் அதனால் இவ்வாறு அதிரடியாக நடந்து கொள்ள நேரிட்டது என அவர் தெரிவித்துள்ளார். 

தமிழ் பெண்கள் பொட்டு, காதணி அணிய தடை விதித்த நிர்வாகம் - குரல் கொடுத்த அமைச்சர் ஜீவன்  பெருந்தோட்டங்களில் பணியில் ஈடுபட்டு வரும் தமிழ் பெண்கள் நெற்றில் சிகப்பு திலகமிடுவதனை தோட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தியதாகவும் அதற்கு எதிராக குரல் கொடுத்ததாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.அண்மையில் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடந்து கொண்ட விதம் தொடர்பில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆக்ரோசமான முறையில் நடந்து கொண்டதாக சமூக ஊடகங்களில் காணொளிகள் வெளியிடப்பட்டிருந்தன.பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்படாமையை எதிர்த்து தாம் குரல் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.பெருந்தோட்ட நிறுவனங்களின் முகாமையாளர்கள் பலவந்தமான அடிப்படையில் பெண் தொழிலாளர்களின் பொட்டுகளை அகற்றுவதாகவும் காதணிகள் அணியக் கூடாது என உத்தரவிடுவதாகவும் இதனை எதிர்த்து தாம் குரல் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.தேயிலைக்கு பதிலீடாக சில இடங்களில் கோப்பி செய்கை செய்யப்பட்டதனை எதிர்த்து குரல் எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.நாட்டின் பொறுப்பு வாய்ந்த தொழிற்சங்கம் என்ற வகையில் தாம் இவ்வாறு குரல் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் உரிய பதிலளிக்கப்படவில்லை எனவும் அதனால் இவ்வாறு அதிரடியாக நடந்து கொள்ள நேரிட்டது என அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement