அமெரிக்காவில் 5 வாகனங்கள் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் ஒரு பெண் உட்பட 4 இளம் இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்ஷினி வாசுதேவன், ஐதராபாத்தைச் சேர்ந்த ஆர்யன் ரகுநாத் ஒராம்பட்டி, பரூக் ஷேக், லோகேஷ் பலசார்லா ஆகியோர் டெக்சாஸ் மாகாணத்திலிருந்து அர்கான்சாசில் உள்ள பெண்டான்வில்லி நோக்கி SUV காரில் பயணித்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
காரின் பின்புறம் லாரி ஒன்று மோதியதில் கார் தாறுமாறாக ஓடி கவிழ்ந்த நிலையில் பின்னால் வந்த 4 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் கார் தீப்பிடித்து எரிந்ததில் காரில் இருந்தவர்கள் கருகி பலியானார்கள்.
உடல்கள் தீயில் கருகியதால் உயிரிழந்தவர்களின் அடையாளங்களைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நால்வருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாத நிலையில்இவர்கள் 4 பேரும் கார்பூ லிங் செல்போன் செயலி மூலம் காரை வாடகைக்கு எடுத்து சென்று சென்றதாக கூறப்படுகின்றது.
carpooling நிறுவன தரவுகளின் மூலமும் அவர்களின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
அமெரிக்காவில் 5 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து - தமிழ் பெண் உட்பட நால்வர் பலி அமெரிக்காவில் 5 வாகனங்கள் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் ஒரு பெண் உட்பட 4 இளம் இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்ஷினி வாசுதேவன், ஐதராபாத்தைச் சேர்ந்த ஆர்யன் ரகுநாத் ஒராம்பட்டி, பரூக் ஷேக், லோகேஷ் பலசார்லா ஆகியோர் டெக்சாஸ் மாகாணத்திலிருந்து அர்கான்சாசில் உள்ள பெண்டான்வில்லி நோக்கி SUV காரில் பயணித்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.காரின் பின்புறம் லாரி ஒன்று மோதியதில் கார் தாறுமாறாக ஓடி கவிழ்ந்த நிலையில் பின்னால் வந்த 4 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் கார் தீப்பிடித்து எரிந்ததில் காரில் இருந்தவர்கள் கருகி பலியானார்கள்.உடல்கள் தீயில் கருகியதால் உயிரிழந்தவர்களின் அடையாளங்களைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நால்வருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாத நிலையில்இவர்கள் 4 பேரும் கார்பூ லிங் செல்போன் செயலி மூலம் காரை வாடகைக்கு எடுத்து சென்று சென்றதாக கூறப்படுகின்றது.carpooling நிறுவன தரவுகளின் மூலமும் அவர்களின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.