• Sep 08 2024

இலங்கையிலிருந்து ஐரோப்பியா நோக்கிச் சென்ற சரக்கு கப்பலில் பயணித்த தமிழ் இளைஞர்கள் கைது! samugammedia

Tamil nila / Apr 13th 2023, 9:35 pm
image

Advertisement

இலங்கையிலிருந்து ஐரோப்பியாவுக்கு ஆடைகளை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பலுக்குள் ரகசியமாக பயணித்த 4 தமிழ் இளைஞர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். 

கடந்த மார்ச் 25ம் தேதி கொழும்பு துறைமுகத்திலிருந்து கிளம்பிய MV CMA CGM PANAMA எனும் கப்பலில் தமிழ் இளைஞர்கள் ரகசியமாக நுழைந்திருக்கின்றனர். ஐரோப்பியாவை நோக்கிச் சென்ற அக்கப்பல் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் இருந்த பொழுது அந்த இளைஞர்களை கப்பல் கேப்டன் கண்டறிந்திருக்கிறார். 

இதையடுத்து, அதே கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் மற்றொரு கப்பலான MV Jackson Bayயில் அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். 

கடுமையான பாதுகாப்புக்கு இடையில் கொண்டு வரப்பட்ட இந்த இளைஞர்களை சர்வதேச கடல் பகுதியில் வைத்து கடந்த ஏப்ரல் 10ம் தேதி இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்த இளைஞர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக நடவடிக்கைகளுக்காக 4 தமிழ் இளைஞர்களும் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 


இலங்கையிலிருந்து ஐரோப்பியா நோக்கிச் சென்ற சரக்கு கப்பலில் பயணித்த தமிழ் இளைஞர்கள் கைது samugammedia இலங்கையிலிருந்து ஐரோப்பியாவுக்கு ஆடைகளை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பலுக்குள் ரகசியமாக பயணித்த 4 தமிழ் இளைஞர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த மார்ச் 25ம் தேதி கொழும்பு துறைமுகத்திலிருந்து கிளம்பிய MV CMA CGM PANAMA எனும் கப்பலில் தமிழ் இளைஞர்கள் ரகசியமாக நுழைந்திருக்கின்றனர். ஐரோப்பியாவை நோக்கிச் சென்ற அக்கப்பல் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் இருந்த பொழுது அந்த இளைஞர்களை கப்பல் கேப்டன் கண்டறிந்திருக்கிறார். இதையடுத்து, அதே கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் மற்றொரு கப்பலான MV Jackson Bayயில் அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். கடுமையான பாதுகாப்புக்கு இடையில் கொண்டு வரப்பட்ட இந்த இளைஞர்களை சர்வதேச கடல் பகுதியில் வைத்து கடந்த ஏப்ரல் 10ம் தேதி இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றனர்.இந்த இளைஞர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக நடவடிக்கைகளுக்காக 4 தமிழ் இளைஞர்களும் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement