• Oct 02 2024

18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலங்கையில் அறிமுகமாகும் வரி அடையாள எண் - வெளியானது தெளிவுபடுதல்..!samugammedia

mathuri / Jan 3rd 2024, 10:19 am
image

Advertisement

இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல், வரி அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு வரி அடையாள இலக்கம் பெற்றாலும் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  இந்த வரி அடையாள எண், வங்கி கணக்கு தொடங்கும் போதும், கட்டிட திட்டங்களுக்கு ஒப்புதல் கோரும் போதும், வாகனம் பதிவு செய்யும் போதும், போக்குவரத்து வருவாய் உரிமம் புதுப்பிக்கும் போதும், நில உரிமையை பதிவு செய்யும் போதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் பதிவு செய்வது குறித்து தவறான கருத்து பரப்படுவதாகவும் பதிவு செய்வது கட்டாயமாகும் என்பதோடு மேலும், வருடாந்த வரி விலக்கு வரம்பான 12 லட்சம் ரூபாவிற்கு மேல் வருமானம் ஈட்டும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டியவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

அனைவரும் வரி செலுத்துதலுக்கு உட்பட்டவர்கள். பதிவு கட்டாயம். ஆனாலும் ஆண்டுக்கு 12 லட்சத்தை தாண்டினால், அவர் வரி செலுத்துபவராக மாறுகிறார்கள்” என அவர் மேலும் விளக்கமளித்துள்ளார். 


18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலங்கையில் அறிமுகமாகும் வரி அடையாள எண் - வெளியானது தெளிவுபடுதல்.samugammedia இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல், வரி அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு வரி அடையாள இலக்கம் பெற்றாலும் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இதேவேளை,  இந்த வரி அடையாள எண், வங்கி கணக்கு தொடங்கும் போதும், கட்டிட திட்டங்களுக்கு ஒப்புதல் கோரும் போதும், வாகனம் பதிவு செய்யும் போதும், போக்குவரத்து வருவாய் உரிமம் புதுப்பிக்கும் போதும், நில உரிமையை பதிவு செய்யும் போதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் பதிவு செய்வது குறித்து தவறான கருத்து பரப்பபடுவதாகவும் பதிவு செய்வது கட்டாயமாகும் என்பதோடு மேலும், வருடாந்த வரி விலக்கு வரம்பான 12 லட்சம் ரூபாவிற்கு மேல் வருமானம் ஈட்டும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டியவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  அனைவரும் வரி செலுத்துதலுக்கு உட்பட்டவர்கள். பதிவு கட்டாயம். ஆனாலும் ஆண்டுக்கு 12 லட்சத்தை தாண்டினால், அவர் வரி செலுத்துபவராக மாறுகிறார்கள்” என அவர் மேலும் விளக்கமளித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement