• Sep 08 2024

கிளிநொச்சி வேராவில் இந்து மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் சேவை நலன் பாராட்டு விழா samugammedia

Chithra / Jul 16th 2023, 1:31 pm
image

Advertisement

கிளிநொச்சி வேராவில் இந்து மகா வித்தியாலயத்தில்  "வாழும் போதே வாழ்த்துவோம் " என்ற தொனிப்பொருளில் 2009ம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் (யுத்த காலப்பகுதி) இப்பாடசாலையில் கற்பித்த அதிபர் ஆசிரியர்களுக்கான சேவைநலன் பாராட்டும், கெளரவிப்பும், ஒன்று கூடலும் அப்பாடசாலையில் கல்வி கற்ற 2006 க.பொ.த சாதாரண தர மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வெகு விமரிசையாக அண்மையில்  கொண்டாடப்பட்டது. 

இதற்கு பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சிவகொழுந்து ஸ்ரீசற்குணராஜா கலந்து கொண்டார். 

சிறப்பு விருந்தினர்களாக  யாழ் .தேசியற்கல்வியற்கல்லாரி பீடாதிபதி. சுப்பிரமணியம் பரமானந்தம் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரும் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளருமாகிய வைத்தியக்கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி, கௌரவ விருந்தினராக கோட்டக்கல்வி அதிகாரி திரு நா. கணேஸ்வரநாதனும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

இதன்பொழுது ஆசிரியர்களுக்கு மாணவர்களால் நினைவுப்பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் மாணவர்களும் ஆசிரியர்களால் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


கிளிநொச்சி வேராவில் இந்து மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் சேவை நலன் பாராட்டு விழா samugammedia கிளிநொச்சி வேராவில் இந்து மகா வித்தியாலயத்தில்  "வாழும் போதே வாழ்த்துவோம் " என்ற தொனிப்பொருளில் 2009ம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் (யுத்த காலப்பகுதி) இப்பாடசாலையில் கற்பித்த அதிபர் ஆசிரியர்களுக்கான சேவைநலன் பாராட்டும், கெளரவிப்பும், ஒன்று கூடலும் அப்பாடசாலையில் கல்வி கற்ற 2006 க.பொ.த சாதாரண தர மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வெகு விமரிசையாக அண்மையில்  கொண்டாடப்பட்டது. இதற்கு பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சிவகொழுந்து ஸ்ரீசற்குணராஜா கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக  யாழ் .தேசியற்கல்வியற்கல்லாரி பீடாதிபதி. சுப்பிரமணியம் பரமானந்தம் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரும் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளருமாகிய வைத்தியக்கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி, கௌரவ விருந்தினராக கோட்டக்கல்வி அதிகாரி திரு நா. கணேஸ்வரநாதனும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .இதன்பொழுது ஆசிரியர்களுக்கு மாணவர்களால் நினைவுப்பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.மேலும் மாணவர்களும் ஆசிரியர்களால் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement