• Nov 26 2024

கொத்து சாப்பிட்டுவிட்டு உறங்கிய இளம் தாய் உயிரிழப்பு..! இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

Chithra / Jan 17th 2024, 3:23 pm
image


 

இரவு கொத்து ரொட்டி சாப்பிட்டுவிட்டு தூங்கிய பெண்ணொருவர்  காலையில் உயிரிழந்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரண - வல்பிட்ட,  பின்னகொலஹேன பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய திலினி மதுஷிகா என்ற  மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சுமார் மூன்று வருடங்களாக அவரது உடல் பருமன் அதிகரித்து, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும்,

தூங்கும் போது ஆக்சிஜன் வழங்கும் இயந்திரத்தை பயன்படுத்துமாறு  வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந் நிலையில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை (14) இரவு தனது கணவருடன் வெளியே சென்று,

கொத்து சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து வழக்கம் போல் ஆக்சிஜன் வழங்கும் இயந்திரத்தை அணிந்து தூங்கியுள்ளார்.

மறுநாள் அதிகாலை அப்பெண் எழுந்திருக்காத நிலையில், குறித்த பெண்ணின் கணவர் பெண்ணை  ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போது  அவர்  உயிரிழந்துள்ளமை ​ தெரியவந்துள்ளது.  

மேலும் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் அடிப்படையில், உடல் பருமன் காரணமாக நுரையீரல் செயல்பாடு தடைப்பட்டு, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக ஹொரண மரண விசாரணை நீதவான் சுமேதா குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொத்து சாப்பிட்டுவிட்டு உறங்கிய இளம் தாய் உயிரிழப்பு. இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்  இரவு கொத்து ரொட்டி சாப்பிட்டுவிட்டு தூங்கிய பெண்ணொருவர்  காலையில் உயிரிழந்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹொரண - வல்பிட்ட,  பின்னகொலஹேன பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய திலினி மதுஷிகா என்ற  மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சுமார் மூன்று வருடங்களாக அவரது உடல் பருமன் அதிகரித்து, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும்,தூங்கும் போது ஆக்சிஜன் வழங்கும் இயந்திரத்தை பயன்படுத்துமாறு  வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இந் நிலையில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை (14) இரவு தனது கணவருடன் வெளியே சென்று,கொத்து சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து வழக்கம் போல் ஆக்சிஜன் வழங்கும் இயந்திரத்தை அணிந்து தூங்கியுள்ளார்.மறுநாள் அதிகாலை அப்பெண் எழுந்திருக்காத நிலையில், குறித்த பெண்ணின் கணவர் பெண்ணை  ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போது  அவர்  உயிரிழந்துள்ளமை ​ தெரியவந்துள்ளது.  மேலும் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் அடிப்படையில், உடல் பருமன் காரணமாக நுரையீரல் செயல்பாடு தடைப்பட்டு, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக ஹொரண மரண விசாரணை நீதவான் சுமேதா குணவர்தன தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement