• May 12 2024

சூடானில் பதற்றம்- இராணுவத்திற்கிடையே வெடித்த மோதல்! samugammedia

Tamil nila / Apr 15th 2023, 7:05 pm
image

Advertisement

வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சூடானில்  2019 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் மற்றும் இராணுவம் கலந்த கூட்டணி ஆட்சி இடம்பெற்று வந்தது. 


ஆனால், அந்நாட்டில்  கடந்த 2021 அக்டோபர்  கூட்டணி ஆட்சியை கவிழ்ந்த பின்னர்  இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக இராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன்னும் அடுத்த நிலையில் துணைத் தலைவராக துணை இராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோவும்  செயற்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும்  இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. துணை இராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையை இராணுவத்துடன் இணைக்க  ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டுள்ளார். 


இதற்கு துணை இராணுவப்படை தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதுடன்,  துணை இராணுவத்தின் தளபதி ஜெனரல் முகமது ஹம்டனுடன்  அதிவிரைவு ஆதரவு படையினரும்  எதிர்த்துள்ளனர். 

இதனால், இராணுவத்திற்கும் , துணை இராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளதால் தலைநகர் ஹர்டோமில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.

இராணுவ தளங்கள் மீது துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு சம்பவங்களும் மேற்கொள்ளப்படுவதுடன் அதிபர் மாளிகைக்கு செல்லும் சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

இதனால்  சூடானில் வசிக்கும் இந்தியர்களை  வீட்டை விட்டு வெளியே வர வேண்டாமென சூடானில் உள்ள இந்திய தூதரகம்  அறிவுறுத்தியுள்ளது. 

இருப்பினும் இந்த மோதலினால் ஏற்பட்டுள்ள உயிர்ச் சேதங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

சூடானில் பதற்றம்- இராணுவத்திற்கிடையே வெடித்த மோதல் samugammedia வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சூடானில்  2019 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் மற்றும் இராணுவம் கலந்த கூட்டணி ஆட்சி இடம்பெற்று வந்தது. ஆனால், அந்நாட்டில்  கடந்த 2021 அக்டோபர்  கூட்டணி ஆட்சியை கவிழ்ந்த பின்னர்  இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக இராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன்னும் அடுத்த நிலையில் துணைத் தலைவராக துணை இராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோவும்  செயற்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும்  இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. துணை இராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையை இராணுவத்துடன் இணைக்க  ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்கு துணை இராணுவப்படை தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதுடன்,  துணை இராணுவத்தின் தளபதி ஜெனரல் முகமது ஹம்டனுடன்  அதிவிரைவு ஆதரவு படையினரும்  எதிர்த்துள்ளனர். இதனால், இராணுவத்திற்கும் , துணை இராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளதால் தலைநகர் ஹர்டோமில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.இராணுவ தளங்கள் மீது துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு சம்பவங்களும் மேற்கொள்ளப்படுவதுடன் அதிபர் மாளிகைக்கு செல்லும் சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.இதனால்  சூடானில் வசிக்கும் இந்தியர்களை  வீட்டை விட்டு வெளியே வர வேண்டாமென சூடானில் உள்ள இந்திய தூதரகம்  அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் இந்த மோதலினால் ஏற்பட்டுள்ள உயிர்ச் சேதங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

Advertisement