• Jun 27 2024

கிளிநொச்சியில் பயங்கரம்...! 23வயதுடைய இளம் குடும்பஸ்தர் அடித்துக் கொலை..! samugammedia

Sharmi / Oct 26th 2023, 8:47 am
image

Advertisement

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி 5ம் வீட்டுத்திட்டபகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கல்மடுநகர் - சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வெற்றிலை வாங்குவதற்காக கடைக்கு சென்ற குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. குறித்த அழைப்பின் பின்னர் அந்த நபர் கடையை விட்டு மோட்டார் சைக்கிளில் கடந்து சென்றுள்ளார்.

சற்று நேரத்தில் சத்தம் கேட்டது. அதன் பின்னர் இருவர் சம்பவ இடத்தை விட்டு ஓடினர். இரவு என்பதால் அடையாளம் காண முடியவில்லை என பொலிசாரின் விசாரணையில் சம்பவத்தை அவதானித்தவர்கள் சாட்சியம் வழங்கியுள்ளனர்.

அதேவேளை சடலத்தின் வாய் மற்றும் காதில் இரத்தம் வெளியேறிய நிலையில் காணப்பட்டமையால் குறித்த நபர் கட்டையால் தாக்கப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இச் சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்று நீதவான் விசாரணைகள் முன்னெடுத்த பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் எனவும், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனவும் இராமநாதபுரம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் நவரத்தினராசா மதுஸன்  என்ற 23 வயதுடைய ஒருபிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் குற்றத்தடுப்பு பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.


கிளிநொச்சியில் பயங்கரம். 23வயதுடைய இளம் குடும்பஸ்தர் அடித்துக் கொலை. samugammedia கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி 5ம் வீட்டுத்திட்டபகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கல்மடுநகர் - சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வெற்றிலை வாங்குவதற்காக கடைக்கு சென்ற குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. குறித்த அழைப்பின் பின்னர் அந்த நபர் கடையை விட்டு மோட்டார் சைக்கிளில் கடந்து சென்றுள்ளார்.சற்று நேரத்தில் சத்தம் கேட்டது. அதன் பின்னர் இருவர் சம்பவ இடத்தை விட்டு ஓடினர். இரவு என்பதால் அடையாளம் காண முடியவில்லை என பொலிசாரின் விசாரணையில் சம்பவத்தை அவதானித்தவர்கள் சாட்சியம் வழங்கியுள்ளனர்.அதேவேளை சடலத்தின் வாய் மற்றும் காதில் இரத்தம் வெளியேறிய நிலையில் காணப்பட்டமையால் குறித்த நபர் கட்டையால் தாக்கப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இச் சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்று நீதவான் விசாரணைகள் முன்னெடுத்த பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் எனவும், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனவும் இராமநாதபுரம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்தவர் நவரத்தினராசா மதுஸன்  என்ற 23 வயதுடைய ஒருபிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.அதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் குற்றத்தடுப்பு பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement