• May 18 2024

இலங்கையில் அதிகரிக்கும் பக்கவாதத்திற்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை..! வைத்தியர் அதிர்ச்சித் தகவல் samugammedia

Chithra / Oct 26th 2023, 8:53 am
image

Advertisement

 

நாட்டில் தற்போது பக்கவாதத்திற்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்தியர் ஹர்ஷ குணசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் நான்கில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவர் உரையாடும் போது வார்த்தை பிரயோகங்களில் ஏற்படும் தடுமாற்றம் மற்றும் முகத்தின் ஒரு பக்கம் இழுப்பது போன்றன பக்கவாதத்துக்கான அறிகுறிகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் 6.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பக்கவாதம் காரணமாக உயிரிழப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அவர்களில் 51 சதவீதமானோர் ஆண்களாவர்.

இலங்கையில் இரண்டு இலட்சம் பேர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ஹர்ஷ குணசேகர தெரிவித்துள்ளார்.


இலங்கையில் அதிகரிக்கும் பக்கவாதத்திற்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை. வைத்தியர் அதிர்ச்சித் தகவல் samugammedia  நாட்டில் தற்போது பக்கவாதத்திற்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்தியர் ஹர்ஷ குணசேகர தெரிவித்துள்ளார்.நாட்டில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் நான்கில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஒருவர் உரையாடும் போது வார்த்தை பிரயோகங்களில் ஏற்படும் தடுமாற்றம் மற்றும் முகத்தின் ஒரு பக்கம் இழுப்பது போன்றன பக்கவாதத்துக்கான அறிகுறிகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.உலகளாவிய ரீதியில் 6.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பக்கவாதம் காரணமாக உயிரிழப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அவர்களில் 51 சதவீதமானோர் ஆண்களாவர்.இலங்கையில் இரண்டு இலட்சம் பேர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ஹர்ஷ குணசேகர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement