• May 05 2024

நாட்டில் பலப்படுத்தப்பட்டுள்ள சி.ஐ.டி.யின் பாதுகாப்பு..! வெளியான காரணம்..! samugammedia

CID
Chithra / Oct 26th 2023, 8:59 am
image

Advertisement

 

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில், பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள காவல்துறை விஷேட அதிரடிப்படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக மற்றும் குடு சலிந்து ஆகியோரை காப்பாற்ற முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வெளியானதை அடுத்து இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தாக்குதல் திட்டம் ஒன்றை தயாரித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேற தயாராகவுள்ளதாக தகவல் வெளியான ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்களை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தங்களது உயிருக்கு உத்தரவாதம் வழங்குமாறு கோரி குறித்த இருவரும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

நாட்டில் பலப்படுத்தப்பட்டுள்ள சி.ஐ.டி.யின் பாதுகாப்பு. வெளியான காரணம். samugammedia  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில், பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள காவல்துறை விஷேட அதிரடிப்படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக மற்றும் குடு சலிந்து ஆகியோரை காப்பாற்ற முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வெளியானதை அடுத்து இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதேவேளை, தாக்குதல் திட்டம் ஒன்றை தயாரித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேற தயாராகவுள்ளதாக தகவல் வெளியான ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்களை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.தங்களது உயிருக்கு உத்தரவாதம் வழங்குமாறு கோரி குறித்த இருவரும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement